|
(என்ப = என்பது, வாழும்
= வாழ்கின்ற)
எண்ணை
அடிப்படையாகக் கொண்டனவும்
எழுத்தை
அடிப்படையாகக் கொண்டனவும் ஆகிய இரண்டும் உயிர்களுக்கு
இருகண் போன்றவை என வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
குறளுக்கு
உரை எழுதியவர்களில் சிறப்புடையவர் பரிமேலழகர்
அவர் எண் என்பது கணிதத்தைச் சுட்டுகிறது என்கிறார். மொழி
நூல் அறிஞர் பாவாணர் போன்றோரும்
எண் என்பது
கணிதத்தையே குறிப்பிடுகிறது என்கின்றனர்.
எண்ணை
அடிப்படையாகக் கொண்ட கணிதமே கல்வியில்
முதன்மையானது என்பது வள்ளுவர் கருத்து. எனவே தான்,
குறளின் முதலில் ‘எண்’ என்று சுட்டி, பின்னரே ‘ஏனைய எழுத்து’
என்று குறிப்பிடுகிறார். ‘ஏனை’ என்பதற்குப்பல்வேறு வகையான
விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால்
பேராசிரியர்
வா.செ.குழந்தைசாமி அவர்கள் ‘ஏனைய என்று சொல்லும் போதே
சொல்லப்படும் பொருள் முதல் இடத்தை இழந்து
விடுகிறது
எழுத்திற்கு இக்குறளில் இரண்டாவது இடம் உறுதிப்படுத்தப்பட்டு
விடுகிறது’ என்று குறிப்பிடுகிறார். இதன்
அடிப்படையில்
பார்த்தால் வள்ளுவர் எண்ணை அடிப்படையாகக்
கொண்ட
கணிதமே முதன்மையானது என்று கருதியிருக்கிறார் என்பது
உண்மை.
“நியூட்டனின்
விதிகளும் ஐன்ஸ்டீனின்
தேற்றமும்
கணிதமொழியில் அமைந்தவையே. கணிதம் இன்றி அறிவியல்
இல்லை. கணிதம் இன்றி அணுயுகம் இல்லை.
விண்வெளிப்
பயணம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் எண்ணின்
அடிப்படையில் அமைந்தவை. இன்று மனித வாழ்வில் பெரிய
புரட்சியை ஏற்படுத்திய கணிப்பொறி ‘0’. ‘1’
என்ற இரண்டு
எண்களின் அடிப்படையில் செயல்படுவது தான்” என அறிவியல்
அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் குறிப்பிடுவார். எண்ணின்
சிறப்பை நன்கு உணர்ந்தவர் வள்ளுவர்.
எனவே அதற்கு
முன்னுரிமை வழங்கியுள்ளார்.
மேலும்
எண்ணை எதற்கு உவமையாகக் கூறுகிறார்? கண்ணுக்கு
உவமையாகக் கூறுகிறார். ‘கண்’ பார்வைக்கு உரியது.
கண்
இல்லாவிட்டால், இந்த உலகிலுள்ள காட்சிப் பொருள் எதையும்
பார்த்து மகிழ இயலாது. அதைப்போல் கணிதக் கண் கொண்டே
உலகிலுள்ள எல்லாத் துறைகளையும் நோக்க வேண்டும். கண்
என்னும் எண் இல்லாவிட்டால் அறிவியலில் காணப்படும் இவ்வளவு
முன்னேற்றத்தையும் பார்க்க இயலாது. கணிதம்
என்னும்
அடிப்படையே பிற துறைகளைப் படிப்பதற்கும்
காரணமாக
அமைகிறது. இது எவ்வளவு சிறந்த உவமை! இல்லையா?
மேற்குறிப்பிட்ட
வள்ளுவரின் கருத்திலிருந்து என்ன தெரிகிறது?
வள்ளுவர் காலத்துத் தமிழ்
மக்கள், கணிதவியலின்
முக்கியத்துவத்தை அறிந்திருக்கின்றனர்.
வள்ளுவருக்கும்
அதைப்பற்றிய அறிவும் தொலை நோக்கும்
இருந்திருக்கிறது
என்பது புலனாகிறது அல்லவா?
|