|
(எத்தன்மைத்து = எந்த இயல்பினதாக இருந்தாலும்)
என்று
குறிப்பிடுகிறார்.
எந்தப்
பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும், அந்தப்
பொருளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
அது தான் உண்மையான அறிவு என்பது இக்குறளின் பொருள்.
இந்தக் குறளில் வள்ளுவர் எந்தக் கருத்தை வெளிப்படுத்துகிறார்?.
எந்த
ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருளின் உண்மைத்
தன்மையை அறிந்து கொள்ளுவதற்குள்ள
எல்லா வித
முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். அதைக் கூர்ந்து
கவனித்து,
அதனால் தாம் கொண்ட ஐயத்தைப் போக்கும் வகையில் நன்கு
சோதித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
வள்ளுவர்
சொல்லிய இக்கருத்து, அறிவியல் அணுகு முறையைச் சார்ந்தது.
•
நியூட்டன்
தன் தலைக்கு மேல் தொங்கிய ஆப்பிள் பழம்,
நிலத்தில்
விழுந்ததைக் கூர்ந்து கவனித்த நியூட்டன்
என்னும்
அறிவியலறிஞனுக்குப் பழம் மேல் நோக்கிச் செல்லாமல்,
ஏன்
கீழே நிலத்தில் விழ வேண்டும் என்ற ஐயம்
ஏற்பட்டது. தன்
ஐயத்தைப் போக்க விரும்பி அவன் ஆய்வு மேற்கொண்டான்.
அந்த ஆய்வின் வாயிலாக, ஆப்பிள் கீழே நிலத்தில் விழுவதற்குக்
காரணம் புவிஈர்ப்பு ஆற்றல் (Centre of
gravity) என்ற
உண்மையைக் கண்டுபிடித்தான்.
ஆப்பிள்
கீழே விழுவதைப் பற்றிப் பலரும், பலகாலமாகப்
பல
கதைகளைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள்
கூற்றை
நியூட்டன் நம்பாமல், தன் முயற்சியினால் செய்த
ஆய்வின்
வாயிலாக உண்மையை அறிந்தான். வள்ளுவரும் யார்
எதைச்
சொன்னாலும் அதை நம்ப வேண்டியதில்லை. நீ உன் முயற்சியினால்
உண்மையைக் கண்டுபிடி என்று இன்னொரு குறளிலும் கூறுகிறார்.
இவற்றிலிருந்து
நாம் தெரிந்து கொள்வது என்ன வென்றால்,
வள்ளுவர் அறிவியல் அணுகு முறையை
அறிந்துள்ளார்
என்பதேயாகும்.
|