1.6 தொகுப்புரை
தன்னிகரற்ற தலைவன் ஒருவனின் வாழ்வியலை
யாப்பு
அமைத்துப் பாடுவது காப்பியம் என அறிந்தோம்.
பின்னாளில் உருப்பெற்ற
சிற்றிலக்கியங்கள்,
குறுங்காவியங்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றிற்குக்
காப்பியங்கள் அடிப்படையாய் அமைந்தன.
தனி மனிதனின் மேன்மையைப் புகழ்ந்து பாடி,
அவனை
மற்றவர் பின்பற்ற வைக்கும் நோக்கில் காப்பியங்கள் தமிழில்
அமைந்தன.
தமிழின் முதல் காப்பியமான சிலம்பினை
இளங்கோ
நாட்டுப்புற வகையை உட்கொணர்ந்து படைத்தார்
என
அறிந்தோம்.
காப்பியம் குறித்த பல்வேறு அறிஞர்களின் கருத்துகளைத்
தெளிவாக அறிந்து கொண்டோம்.
காப்பிய வகைமைக்கு அடிப்படை
தண்டியலங்கார
நூற்பாவே என அறிந்தோம்.
காப்பியத்தின் நால்வகைப் பொருள்
பற்றி அறிந்தோம்.
வகைமைப்படுத்த உதவும் காப்பியப் பண்புகள் குறித்தும்
காப்பியங்களை வகைப்படுத்துவதன் பயன்முறை குறித்தும்
அறிந்தோம்.
காப்பியக் காலம் பற்றி அறிந்தோம்.