3.1 இராமாயணம் வடமொழியில் வான்மீகி
முனிவரால் எழுதப்பட்ட முதல் இதிகாசம் இராமாயணம்
ஆகும். தன்னிகரற்ற தலைவனாக விளங்கிய இராமனின் வாழ்க்கையைக்
குறிப்பிடும் நூல் இராமாயணம். 14 இந்திய மொழிகளில்
மொழி பெயர்க்கப்பட்ட சிறப்பினையும், தழுவலாக எழுதப்பட்ட
சிறப்பினையும் வான்மீகி
இராமாயணம் பெற்றுள்ளது.
|