3.2 கம்பராமாயணம்
ஆசிரியர் கம்பர்.
குலோத்துங்க சோழனின் அவைப் புலவர். ‘ ‘கல்வியிற்
பெரியவர் கம்பன்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்’
என்பர். ‘கவிச்சக்கரவர்த்தி’ என்னும் புகழுக்கு உரியவர்.
காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு எனவும், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
எனவும் இரு வரையறைகள் உள்ளன.
கம்பர்
சூட்டிய பெயர்
கம்பர்
தம்முடைய நூலுக்கு இராமாவதாரம் என்றோ, இராமகாதை
என்றோ பெயர் சூட்டியிருக்க வேண்டும் என்பதைக் கம்பராமாயணச்
சிறப்புப் பாயிரம் விளக்குகிறது.
காசில்
கொற்றத்து இராமன் கதை |
எனவும் ,
இராமாவதாரப்
பேர்த்தொடை நிரம்பிய
தோமறு மாக்கதை |
எனவும் அமையும் பாயிர வரிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
3.2.1
வான்மீகியும் கம்பரும்
வான்மீகியை மூல
நூலாசிரியராக ஏற்று, கம்பர் காவியம் படைத்தாலும் அப்படியே எடுத்தாளாமல் தமிழ்
மரபிற்கு ஏற்பச் சில மாற்றங்களைப் படைத்தார்.
சீதையைக்கண்டுகாதல் கொண்ட
பின்தான் இராமன் வில்லை முறிப்பதாகக் கம்பர் காட்டியுள்ளார்.
இராவணன் பிச்சைகேட்டு
வந்து சீதையைத் தூக்கிச் செல்லுதலைப் பர்ணசாலையோடு தூக்கிச் சென்றான் எனக்
கம்பன் மாற்றுகிறார். அந்நிய ஆடவனின் விரல் நுனிகூடத்
தமிழ்ப் பெண்மீது படக்கூடாது என்ற உயரிய தமிழ்மரபினைக் கம்பா காத்துள்ளார்.
இராமன் சைவ உணவு
உண்பவனாகக் கம்பர் காட்டியுள்ளார்.
தன் அண்ணன் வாலி
இறந்ததும், தம்பி சுக்ரீவன், தன் அண்ணி தாரையைத் தன் தாயாராக ஏற்கிறான்.
வான்மீகி இராமாயணத்தில் தாரை சுக்ரீவன் மனைவியாக்கப் பட்டாள்.
இராமன் தன்னைப்
பரம்பொருள் என நினைக்காமல், வாலியின் உரையாடலைப் பொறுமையாகக் கேட்டல் போன்ற
பல இடங்களில் வான்மீகியிடமிருந்து வேறுபட்டுக் கம்பர் தம்
தனித்துவத்தைக் காட்டுகிறார்.
3.2.2
கம்பராமாயண அமைப்பு
கம்பர் தம் கம்பராமாயணத்தை,
(1) |
பால காண்டம் |
(2) |
அயோத்தியா காண்டம் |
(3) |
ஆரண்ய காண்டம் |
(4) |
கிட்கிந்தா காண்டம் |
(5) |
சுந்தர காண்டம் |
(6) |
யுத்த காண்டம் |
எனும் ஆறு காண்டங்களாகப் பகுத்தார்.
118 படலங்களைக்
கொண்ட இந்நூல் விருத்தப்பாவில் எழுதப்பட்டுள்ளது. கம்பர் 460க்கும் மேற்பட்ட
சந்தங்களை ஆண்டுள்ளார்.
3.2.3
கம்பரின் கவிச்சிறப்பு
இராமனுக்குப்
பட்டாபிஷேகம் என்ற செய்தியை அறிந்த கூனி கனல் கக்கும் கண்கேளாடு கைகேயியின்
அந்தப்புரத்தில் நுழைய, அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.
‘கிரகணம் ஏற்பட்டுப் பாம்பு கவ்வும்போதும் கவலைப்படாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கும்
நிலவு போலிருக்கிறாயே’ என்று கூனி வினவ, கைகேயி அழகாகப் பதில் தருகிறாள்.
பராவுஅரும்
புதல்வரைப் பயக்க யாவரும்
உராவுஅருந் துயரைவிட்டு உறுதி காண்பரால்
விராவுஅரும் புவிக்குஎலாம் வேத மேஅன
இராமனைப் பயந்தஎதற்கு இடர்உண் டோஎன்றாள். |
-(அயோத்தியா
காண்டம்,மந்தரை சூழ்ச்சிப் படலம்,47) |
(பராவு அரும்
= புகழ்வதற்கு அரிய ; பயக்க
யாவரும் = பெற எவரும்; உராவுஅரும்
= விட முடியாத; உறுதி காண்பரால்
= நன்மை டைவார்கள்; புவி =
உலகம் ; இரமனைப்
பயந்த = இராமனை மகனாகப் பெற்ற; எற்கு
= எனக்கு)
வான்மீகி இராமாயணத்தின் தழுவல் என உணர
முடியா அளவு, கம்பராமாயணம் கற்பனையிலும் சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாலும்
சிறந்து விளங்குகின்றது.
இராமன் , குகன்,
சுக்ரீவன், வீடணன் மூவரையும் தன் தம்பியராய் ஏற்றுக் கொண்டதைக் கம்பர் “குகனொடும்
ஐவர் ஆனேம். . .” எனும் பாடலில் (6635) காட்டுகிறார்.
·
வ.வே.சு. ஐயர் பாராட்டு
“கம்பராமாயணமானது
ஹோமர் எழுதிய இலியடடையும்,
வெர்கில் எழுதிய
ஈனியடடையும், மில்டனுடைய
சுவர்க்க நீக்கததையும், வியாச
பாரதத்தையும் தனக்கே முதல் நூலாக இருந்த வால்மீகி
ராமாயணத்தையும் கூட, பெருங்காப்பிய இலட்சணத்தின்
அம்சங்களுள் அநேகமாய் அனைத்தையும்
வென்று விட்டது” என்று வ.வே.சு.ஐயர் குறிப்பிடுவது உண்மையே.
· உத்தரகாண்டம்
கம்பராமாயணத்தின் ஏழாவது காண்டமாக
இது அமைகிறது. ஒட்டக்கூத்தர் பாடினார் என்பர். பல பாடல்களை வரிசையாய் அடுக்கி
ஒரு காட்சியை வெளிக்கொணரும் கம்பரின் உத்தி உத்தர
காண்டத்தில் உள்ளது. தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய ஏட்டுப்
பிரதியில் 25 படலங்களும், 1503 பாடல்களும் பெற்று
உத்தர காண்டம் அமைகிறது.
· பிற இராமாயண
நூல்கள்
கம்பராமாயணத்தை
அடியொற்றிச்
சங்கிரகராமாயணம்,
இராமாயணத் திருப்புகழ், ஸ்ரீராமாவதாராதி கால நிர்ணயம்
முதலான நூல்கள் எழுந்தன. இராமாயண கதை
நாடகமாக நடிக்கப்பட்டும், வில்லுப்பாட்டாகப் பாடப்பட்டும்
மக்களிடையே இன்றும் வழக்கத்தில் உள்ளது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
இந்தியாவின் இதிகாசங்கள் எவை?
|
|
2. |
வடமொழியில் இராமாயணத்தை
எழுதியவர் யார்?
|
|
3. |
கம்பர் எந்த அரசனின் அவைக்களப் புலவர்?
|
|
4. |
கம்பர்
தமது இராமாயணத்திற்குச் சூட்டிய பெயர்
யாது?
|
|
5. |
கம்பராமாயணம் எத்தனை
காண்டங்களை
உள்ளடக்கியது?
|
|
|
கிரகணம் ஏற்படும்போது பாம்பு கவ்வுவதைப்
பற்றிக் கவலைப் படாமல் ஒளிவீசும் நிலவு
போலிருந்தவள் யார்?
|
|
7. |
“இராமனை மகனாகப் பெற்ற எனக்கு இடர்
உண்டோ?” என வினவியவள் யார்?
|
|
8.
|
உத்தர காண்டத்தை எழுதியவர் யார்?
|
|
9.
|
“குகனொடும் ஐவர் ஆனேம்” என்று கூறியவர்
யார்?
|
|
10.
|
கம்பராமாயணம் எவ்வகைப் பாவால்
எழுதப்பட்டது?
|
|
11.
|
இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றதும்
கோபப்பட்டவள் யார்?
|
|
12.
|
பெருங்காப்பிய இலட்சணத்தில் வென்றுவிட்டது
என வ.வே.சு.ஐயர் எதைக் குறிப்பிட்டார்?
|
|
|