4.0 பாட முன்னுரை

    இப்பாடம் உடம்படுமெய் ஒலிகள் என்றால் என்ன என்பது பற்றியும், தமிழில் உள்ள உடம்படுமெய் ஒலிகள் யாவை என்பது பற்றியும், இருசொற்கள் சேர்ந்து வரும் புணர்ச்சியில் அவற்றின் பங்கு எத்தகையது என்பது பற்றியும் விளக்குகிறது. உடம்படுமெய் ஒலிகள் புணர்ச்சியில் எந்தெந்தச் சூழலில் வரும் என்பதைச் சான்றுகளுடன் விளக்குகிறது. உடம்படுமெய் ஒலிகள் பற்றித் தொல்காப்பியம்     குறிப்பிடும்     கருத்தை     விளக்குகிறது. தொல்காப்பியத்திலும், அதனை அடுத்துத் தோன்றிய சங்க இலக்கியங்களிலும் உடம்படுமெய் ஒலிகளின் வருகை எவ்வாறு இருந்தது என்பதை விளக்குகிறது. உடம்படுமெய் ஒலிகள் பற்றி நன்னூல் கூறும் கருத்துகளை விளக்குகிறது. தற்காலத் தமிழில் இருசொற்கள் சேர்ந்து வரும் புணர்ச்சியை மொழியியலார் அகச்சந்தி, புறச்சந்தி என இரு வகையாகப் பிரித்துக் காட்டி விளக்குவதைக்     கூறுகிறது. இவ்விருவகைப் புணர்ச்சியில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளக்கிக் காட்டுகிறது.