1) உடம்படுமெய் ஒலி என்றால் என்ன?

நிலைமொழியின் இறுதியிலும்,    வருமொழியின் முதலிலும் உயிர் ஒலிகள் வருமானால், அவ்விரண்டு உயிர் ஒலிகளையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, அவை    இரண்டுக்கும்    இடையே விட்டிசை தோன்றுகிறது.     அவ்விட்டிசையைத்     தடுக்க அவ்விரண்டு உயிர்     ஒலிகளுக்கும் இடையே ஒரு மெய் ஒலி சேர்க்கப்படும். அந்த மெய் ஒலியானது விட்டிசைத்து நிற்கும் இரண்டு உயிர் ஒலிகளையும் விட்டிசைக்காமல் உடம்படுத்தும் காரணத்தால் உடம்படுமெய் ஒலி எனப்படுகிறது.



முன்