|
இந்தப்
பாடம் இசையமைதி பற்றிக் குறிப்பிடுகின்றது.
நான்கு பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது.
இசை, பண் பற்றியும்,
சங்க இலக்கியப் பண்
பற்றியும் தெளிவு படுத்துகின்றது.
தேவாரப் பண்கள் பற்றியும்,
பண்ணடைவில்
தேவாரப் பதிகங்கள் இடம் பெற்றுள்ள
நிலையைப்
பட்டியலோடும் விளக்குகின்றது.
தாளம் பற்றியும், தூக்குப்
பற்றியும், தாளத்தின்
உயிர் நிலைகளைப் பற்றியும் எடுத்தியம்புகின்றது.
இசை - மிடற்றிசை,
கருவியிசை என
இருவகைப்படும். அவற்றில் தோல், துளை,
நரம்பு,
கஞ்சக்கருவிகள் பற்றி விளக்கம் அளிக்கின்றது.
|