|
இந்தப்
பாடம் தமிழகத்தின் தனிப்பெரும் இசையான
மங்கல இசையின் சிறப்புப் பற்றி உரைக்கிறது.
மங்கல இசைக் குழுவில்
உள்ள நாகசுரம் என்ற
இசைக்கருவியின் அமைப்பு, வகைகள், பயிற்சிமுறை பற்றியும்,
தவில் கருவியின் அமைப்பு, பெயர்க்காரணம், இலக்கியம்,
கல்வெட்டு உரைக்கும் செய்தி பற்றியும் கூறுகிறது.
ஆலய வழிபாட்டில் முக்கியப்
பங்காற்றி வரும்
இவ்விசை பற்றியும், இவ்விசையைப் போற்றிய மங்கல இசை
மன்னர்கள் பற்றியும், புகழ்சால் கலைஞர்கள்
பற்றியும்
எடுத்துரைக்கின்றது.
|