|
3.2
பஞ்சமரபும்
யாழ்மரபும்
பஞ்சமரபு என்றால் என்ன, யாழ்மரபு
என்றால் என்ன
என்பதை அடுத்துப் பார்ப்போம்.
3.2.1 பஞ்சமரபு
இசைமரபு, வாச்சியமரபு, நிருத்த மரபு, அவிநயமரபு,
தாள மரபு ஆகிய ஐந்தின் மரபினை உணர்த்துவதால்
இந்நூல் பஞ்சமரபு என்று அழைக்கப்படுகிறது.
இசையும்
முழவும் தாளமும் கூத்தும்
அசைவில் அவிநயம் அஞ்சுறுப் பாகும் |
-
பஞ்சமரபு விளக்க மேற்கோள் நூற்பா.
இந்நூலாசிரியர் அறிவனார் ஆவார். இவர் சேறை என்னும்
ஊரைச் சேர்ந்தவர். இந்நூலில் முடத்திருமாறன்
என்ற
பாண்டியனை முன்னிறுத்தும் சில பாடல்கள் காணப்படுகின்றன. முடத்திருமாறன்
இடைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்த பாண்டிய
மன்னன் ஆவான். எனவே இ்ந்நூல் இடைச்சங்கத்தின் இறுதியில்
கடைச்சங்கத்தின் தொடக்கத்தில் படைக்கப்பட்ட நூலாகக்
கருதப்படுகிறது. தற்போது புலவர் வே.ரா.
பெரியசாமிக்
கவுண்டரால் பஞ்சமரபு நூல் பதிக்கப் பெற்றுள்ளது. இப்பதிப்பு
நூல் சங்ககால நூலா என்று ஆய்வாளர்கள் ஐயப்படுகின்றனர்.
பஞ்சமரபின் முதற்பிரிவு இசை மரபு பற்றியதாகும். இப்பகுதியில்,
(1) யாழ் மரபு
(2) வங்கிய மரபு
(3) கண்ட மரபு
(4) நிருத்த மரபு
(5) வகையொழிபு மரபு
என்னும் ஐந்து பிரிவுகள் உள.
3.2.2 யாழ் மரபு
பண்டைய தமிழர்கள் நிலத்தைக்
குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பிரித்து ஒவ்வொரு நிலத்திற்கும்
ஒவ்வொரு யாழாக
ஐந்து யாழ்களைக்
கண்டனர். இவை குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ்,
நெய்தல்யாழ், பாலையாழ் என அழைக்கப்பட்டன.
பஞ்சமரபு
என்ற இசை இலக்கண நூலில் 18
வெண்பாக்கள் யாழ்மரபு பற்றிக் கூறுகின்றன. இவற்றில்
யாழ்வகை, நரம்புகள், யாழ்செய்யப்படுவதற்குரிய மரங்கள்,
யாழின் உறுப்புகள், அவற்றிற்குரிய இலக்கண அமைதிகள்,
யாழிற்குரிய செய்கைகள் பற்றிக் கூறுகின்றன.
பஞ்சமரபு
நால்வகை யாழ்களைப் பற்றிக் கூறுகின்றது
(1) பேரியாழ்
(2) மகரயாழ்
(3) சகோடயாழ்
(4) செங்கோட்டியாழ்
பேரியாழ்
பின்னு மகரஞ் சகோடமுடன்
சீர்பொலி சொல் கோடு செப்பின ராற்றார் பொலிந்த
யின்ன முளவே சில |
இந்நான்குமல்லாத யாழ்களும் உள என்கிறது.
இவ்யாழ்களுக்குரிய நரம்புகள் பற்றியும் அந்நூல் கூறுகின்றது.
பேரியாழ்
-
மகரயாழ்
-
சகோடயாழ் -
செங்கோட்டியாழ்
-
|
21
நரம்புகளைப் பெறும்
19
நரம்புகளைப் பெறும்
14 நரம்புகளைப் பெறும்
7
நரம்புகளைப் பெறும்
|
யாழ் செய்வதற்குரிய மரங்கள் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது. கொன்றை, கருங்காலி, மென்முருக்கு,
குமிழ், தணக்கு ஆகிய மரங்களால் செய்யப்படும். இவ்வகை
யாழ்கள் உத்தம யாழ்கள் என்று அழைக்கப்படும்.
பேரியாழைப் பெருங்கலம் எனவும்,
பாலையாழ்
எனவும் அழைப்பர்.
மகரயாழ் 19 நரம்புகளைக் கொண்டிருக்கும். மகரயாழ்
கோடு, பத்தல், ஆணி, நரம்பு, மாடகம் என்னும் ஐந்து
உறுப்புகளைப் பெற்றிருக்கும்.
சகோடயாழ் 14 நரம்புகளைக்
கொண்டிருக்கும்.
திருஞானசம்பந்தரோடு தலயாத்திரை மேற்கொண்ட
திருநீலகண்ட யாழ்ப்பாணர் கையில் இது தவழ்ந்துள்ளது.செங்கோட்டியாழ் 7 நரம்புகளைக் கொண்டிருக்கும். சங்க
இலக்கியங்களில் கூறப் ்படும்
சீறியாழாகவும் இதனைக் கருதிட
வாய்ப்புள்ளது என்று பேராசிரியர் இ. அங்கயற்கண்ணி
குறிப்பிடுகிறார். (பஞ்சமரபில் இசைமரபு. 1989 பக். 45-46)
தற்காலத்தில் வழக்கில் இருந்து வரும் வீணை
இச்செங்கோட்டியாழே என்று வரகுணபாண்டியன், பாணர்
கைவழி எனப்படும் யாழ்நூலில் கூறியுள்ளார்.
|