4.0 பாட முன்னுரை
இசைத் தமிழ், தமிழிசை
பற்றி இன்று பரவலாகப்
பேசப்பட்டும், எழுதப்பட்டும், ஆராயப்பட்டும் வருகிறது. ஒரு
காலக்கட்டத்தில் தமிழ் மொழிக்கு
இசைமரபு இல்லை என்றும்,
தமிழ்மொழியில் நூல்கள் இல்லை என்றும், பிற மொழியிலிருந்து
தமிழன் பெற்றவையே மிகுதி என்றும்
கூறப்பட்டது.
இக்கருத்துகளுக்கு முடிவு தரும் நிலையிலும் இசைத்தமிழின்
வளர்ச்சியையும், நுட்பங்களையும் எடுத்துரைக்கும் வகையிலும் உ.வே.சாமிநாதையர் 1892-யில் சிலப்பதிகாரத்தை
வெளியிட்டார். இந்நூலும் இந்நூலுக்கு எழுந்த
அரும்பத
உரை, அடியார்க்கு
நல்லார் உரை ஆகியவையும்
இசைத்தமிழ் வளங்களையெல்லாம் நமக்கு எடுத்துணர்த்தின.
சிலப்பதிகாரத்தையும் அரும்பத உரை,
அடியார்க்கு நல்லார்
உரையையும் மையமாகக் கொண்டு இசைத்தமிழ் ஆய்வுகள்
தோன்றலாயின.
(1) தஞ்சை. இராவு சாகிபு.
மு. ஆபிரகாம் பண்டிதரின்
கருணாமிர்த சாகரம் தொகுதி I, II (1917)
கருணாமிர்த சாகரத் திரட்டு
என்ற நூல்கள்.
(2) மதுரை எம்.கே.எம். பொன்னுச்சாமி
பூர்வீக
சங்கீத உண்மை
91930)
(3) விபுலானந்த அடிகளாரின் யாழ் நூல்
(1947)
என்ற நூல்கள் இசைத்தமிழ் ஆய்வின் வளங்கண்ட நூற்களாக உள்ளன. இவர்களின்
இசைத்தமிழ் ஆய்வினைப் பற்றி
இப்பாடம் வாயிலாக அறியலாம்.
|