4.2 மதுரை பொன்னுச்சாமி
தாம் எழுதிய இசைத் தமிழ் ஆய்வு
நூலிற்கு பூர்வீக
சங்கீத உண்மை
என்று பெயரிட்டார். சங்க
இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும்
நிலவிய இசை
பற்றிய உண்மைகள் பல மறைக்கப்பட்டன ; மாற்றப்பட்டன.
இவற்றை மீண்டும் கொண்டு வருவதே இந்நூலின் நோக்கம்
என்றும், இதனால் இதற்குப் பூர்வீக
சங்கீத உண்மை
என்று பெயரிடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பூர்வீக
சங்கீத உண்மை என்ற நூல் ஐந்து பகுதிகளைக்
கொண்டுள்ளது.
(1) நூன் மரபு
(2) கர்த்தா ராகத்தின் நிர்ணயம்
(3) மூர்ச்சை பிரசுதாரம்
(4) கர்த்தா இராகங்களும் அனுபவத்திலிருக்கிற ஜன்ய
இராகங்களும்
(5) இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம்
முதலாவது இயல் பன்னிரு சுரங்கள் பற்றியும்,
பன்னிரு
சுரங்களும் வான் மண்டலத்தில் நிலவும் பன்னிரு இராசிகளில்
நிற்கும் முறையையும் விளக்குகின்றது.
இரண்டாவது இயல் பழந்தமிழ்
மக்கள் 32 தாய்
இராகங்களில் பாடி வந்துள்ள நிலையை எடுத்துரைக்கின்றது.
மூன்றாவது இயல் பண், பண்ணியல்,
திறம், திறத்திறம்
அமையும் நிலைகளை விளக்குகிறது.
நான்காவது இயல் பரதர், சாரங்கதேவர்,
சோமநாதர்,
புண்டரீக விட்டலர், வெங்கடாத்ரி ராஜா,
வேங்கடமகி
ஆகியவர்களின் இசை இலக்கண
அமைப்புகளைக்
குறிப்பிட்டு, பொன்னுச்சாமியின்
தாய் இராகங்கள்
தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இவை பின்வருமாறு,
இதில் வேங்கடமகி கூறிய 72 தாய் இராகங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், 32 தாய் இராகங்களே உண்மையானவை என்றும் விளக்கியுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று அம்மாநாட்டில் கலந்து கொண்டார்.இம்மாநாட்டில் இவர் கூறிய தாய் இராகம் 32 என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக்குழுவில் பம்பாய் பண்டிட், விஷ்ணு திகம்பர், வங்கநாட்டுப் பிரமத் நாத் பானர்ஜி, சபாநாயகரான பிரபாத் தேவஜி ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்து ஏற்றனர். பிறகு இக்கருத்துகளை நூலாக்கி வெளியிட்டார். நூலின் முகப்புப் பகுதியில் தம் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த இசை மேதைகளின் கருத்துகளைப் பெற்று வெளியிட்டார்.
தாய் இராகம் 32 என்ற இவரது கருத்தினைக் காரைக்குடி வீணை சுப்பராமைய்யர், வீணை சாம்பசிவய்யர், மதுரை கிருட்டிணய்யங்கார், அரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், காவிரிப்பட்டினம் கே.வரதாச்சாரியார், திருநெல்வேலியில் சாமளய்யர், பெருங்குளம் வி.சினிவாச அய்யங்கார், கூறைநாடு நடேச பிள்ளை, இலுப்பூர் பொன்னுசாமி , திருப்பாம்புரம் நடராச சுந்தரம் போன்றோர் ஏற்று, சான்றிதழும் கொடுத்துள்ளனர். ஆபிரகாம் பண்டிதர் மிகச் சிறந்த இசைக் கலைஞராகவும், இசை ஆய்வாளராகவும் விளங்கியுள்ளார். தலை சிறந்த இசை மேதைகளாக நாதசுரக் கலைஞர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இவர்கள் இசை ஆய்வாளர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் தாம் கண்ட இசை ஆய்வுகளை நூலாக்கும் பணியில் ஈடுபடாத நிலையில் முறையாக ஆய்வியல் நெறிப்படி ஆய்ந்து இசைத் தமிழ் ஆய்வு நூல் தந்தவராக மதுரை பொன்னுசாமி விளங்கினார்.
|