|
இசைத் தமிழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலைகளைப்
பற்றியும், இசைத் தமிழ் ஆய்விற்கு மூல இலக்கியமாகச்
சிலப்பதிகாரமும், இந்நூலுக்கு எழுந்த உரைநூற்களான
அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையும்
பயன்பட்ட நிலை பற்றியும் இந்தப் பாடம் குறிப்பிடுகின்றது.
சிலப்பதிகாரம் உரையுடன் வெளியிடப்பட்ட பின்பு, தஞ்சாவூர் மு.ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூலாசிரியர் விபுலானந்த அடிகளார், மதுரை பொன்னுச்சாமி பிள்ளை போன்றோர் இசைத் தமிழ் ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் மேற்கொண்ட இசைத் தமிழ் ஆய்வினை உணர வைக்கிறது.
மேலும் குடந்தை ப.சுந்தரேசன், கு.கோதண்டபாணி,
வெள்ளை வாரணனார், பேராசிரியர். வீ.ப.கா.சுந்தரம்,
பேராசிரியர் தனபாண்டியன் போன்றோர் இவ்வகை
ஆய்வினை மேற்கொண்ட நிலைகளை எடுத்துரைக்கின்றது .
|