5.6 தொகுப்புரை

    இசை குரலிசை, கருவி இசை என்று இருவகைப்படும். இவ்விசைகளை வளர்த்த கலைஞர்கள் வாழையடி வாழையென வாழ்ந்து வருகின்றனர். பண்டைய காலங்களில் மன்னர்களாலும் மக்களாலும் பாராட்டப் பெற்றனர். இடைக்காலத்தில் அரசு ஏறிய     மன்னர்களும் இராணிகளும் சிறந்த இசை விற்பன்னர்களாக     விளங்கினர்.     தற்காலத்தில் பொது மக்களாலும் அரசுகளாலும் மதிக்கப்படும் கலைஞர்களாக வாழ்கின்றனர்.

    இவ்விசைக் கலைஞர்கள் பலர் அரிய பெரிய சாதனைகளைச் செய்துள்ளனர். இவர்களில் ஒரு சிலரின் வாழ்வியல்களும் கலைச் சேவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எத்தனையோ மிகச் சிறந்த இசைக் கலைஞர்களுள் ஒரு சிலர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

     இசைப் பயிர் வளர்த்தவர்களில் பெண்களும் முக்கிய இடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கு நிகராக இவர்களும் விளங்கியுள்ளனர்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
வாரியார் நடத்திய இதழின் பெயரைக் குறிப்பிடுக.
2.

தமிழக அரசின் அரசவைக் கலைஞராகத் திகழ்ந்தவர் இருவரின் பெயரைக் குறிப்பிடுக.
3.
படுக்கையில் இருக்கும் பொழுதும் மருந்துண்ணாமல் கொன்னக்கோல் பக்கிரியா கூறிய தொடர் யாது?
4.
வேணுகானம் என்பது எதனைக் குறிக்கும்?
5.

திருமுறை விண்ணப்பிக்கும் இசைக் கலைஞர் இருவரைக் கூறுக.
6.
இசை வளர்த்த நங்கையரில் வீணை என்ற பெயரோடு விளங்கிய வித்தகி பெயரைக் குறிப்பிடுக.
7.
பிற்கால இசையரசியர் மூவர் யார்?
8.
நாட்டுப்புறப் பெண் இசைக் கலைஞர் இருவரைக் குறிப்பிக.
9.
தமிழகத்தில் ஒளவையாராகவும் நந்தனாராகவும் நடித்தவர் யார்?