பாடம் - 5

d06135 இசைக் கலைஞர்கள்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இசைத் தமிழ் பற்றிய பல்வேறு செய்திகளை அறிவிக்கிறது. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக அமையும் இசைக் கலைஞர்கள் பற்றி எடுத்துரைக்கின்றது.

    இசைக் கலைஞர்களை மிடற்றிசைக் கலைஞர்கள், கருவி இசைக் கலைஞர்கள் என்ற வகையில் பிரித்துணரும் நிலையைப் புரிய வைக்கிறது.

    மிடற்றிசை, கருவி இசைக் கலைஞர்களுள் ஆண்பால், பெண்பால் கலைஞர்களின் கலைச் சிறப்பை உணர வைக்கிறது.

     இசைக் கலைஞர்கள் சிலரின் வாழ்க்கை பற்றிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • கலைத் தொண்டாற்றுவதனை வாழ்வியலாகக் கொண்ட கலைஞர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • வாழையடி வாழையென வரும் இசைக் கலைஞர்களால்
    இசை மரபுகள் பேணப்பட்டு வருகின்றன என்பதனைப்
    புரிந்து கொள்ளலாம்.
  • இசைக் கலைஞர்களுள் பண்ணிசை, தாளவிசைக்
    கலைஞர்கள் தமிழிசைக்கு ஆற்றிய தொண்டுகளை
    அறிந்து பாராட்டலாம்.
  • ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற நிலையில் வாழ்ந்த பெண்களைப் பற்றி அறியலாம்.
  • செவ்வியல் இசைக் கலைஞர்கள் பற்றியும் நாட்டுப் புற
    இசைக் கலைஞர்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு