பாடம் - 6

d06136 இசைப் பாடல்களில் சந்த அமைப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இசை என்பது ஓசை இன்பம் பற்றியது; பாடலின் வடிவங்கள் ஓசையின்பத்தை நிர்ணயிக்கின்றன என்பதைச் சொல்கிறது.

    ஓசையின்பத்தைச் சந்தம், வண்ணம், மெட்டு, கட்டளை என்றெல்லாம் குறிப்பிடுவார்கள் என்பதைக் கூறுகிறது.

    தேவாரப் பாடல்கள், திருப்புகழ், காவடிச்சிந்து, நாட்டுப்புறப் பாடல்கள், சித்தர் பாடல்கள் வாயிலாக இசைப் பாடல்களில் உள்ள சந்த அமைப்புகள் பற்றி அறிந்துணரும் நிலையை இந்தப் பாடம் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • இந்தப் பாடம் படிப்பதால் பாடல்களைப் பாட வேண்டும் அல்லது சந்த இனிமையுடன் படிக்க வேண்டும் என்ற உணர்வினைப் பெற முடியும்.

  • பாடலின் இலக்கணமான யாப்பையும், யாப்பின் வெளிப்பாடான ஓசை பற்றியும் அறியலாம்.

  • சந்தங்கள் செவிக்கு இனிமை பயப்பதோடு பாட்டின் வடிவத்தை நிலை குலைய விடாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  • இனிமையான சந்தப் பயிற்சி, புதுப்படைப்பாக்கங்களை வளர்க்கத் துணை புரியும் என்பதை அறியலாம்.

பாட அமைப்பு