பாடம் 6

D07116 : திறனாய்வும் பிறதுறைகளும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

திறனாய்வு நடைமுறைப் பண்பாகிய, பிறதுறைகேளாடு கூடிய அதன் உறவுகளைப் பற்றிக் கூறுகிறது.

பிற துறைகள் என்ன; அவை எத்தகையன என்பது பற்றிக் கூறப்படுகிறது.

பிறதுறை உறவுகளின் தேவைகள் பற்றிச் சொல்கிறது.

திறனாய்வின் முக்கியமான செயல்பாட்டை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

திறனாய்வும் இலக்கியமும் அன்றியும் கலைகள் முதலிய பிற துறைகள் பற்றியும் அவற்றின் அடிப்படைப் பண்புகள் பற்றியும் அறிந்திடலாம்.

கலைகள் முதல் தத்துவங்கள் வரை, திறனாய்வு எவ்வாறு பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியுள்ளது என்பதனை அறிய உதவுகிறது.

திறனாய்வின் முக்கியத்துவத்தை, இந்தப் பாடம் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ளலாம்.