1.0 பாடமுன்னுரை |
பழந்தமிழகத்தில் திருமால், செவ்வேள் ஆகிய தெய்வங்களைக் குறித்த வழிபாடுகள் சிறப்புற்று விளங்கின; கொற்றவை வழிபாடும் சிறந்திருந்தது. இத்தெய்வங்கள் பற்றிய வழிபாட்டுக் குறிப்புகள் சங்கப் பாடல்கள் பலவற்றிலும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இப்பாடத்தில், சங்க நூல்களிற் காணலாகும் திருமால் வழிபாடு பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. |