பக்தி இயக்கத்தின் கொடையாக நமக்குக் கிடைத்த
அருளாளர்களே ஆழ்வார்களும்
நாயன்மார்களும் ஆவர். நாயன்மார்களைப்
பொறுத்தவரை இவ்வியக்கத்தின்
முன்னோடியாக - விடிவெள்ளியாகக்
காரைக்காலம்மையாரைக் குறிப்பிடலாம்.
வைணவத்தில் இத்தகைய
பெருமைக்குரியவர்களாக
முதலாழ்வார்களைக்
கூறலாம். அவர்கள் பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் |

காரைக்கால்
அம்மையார் |

பொய்கையாழ்வார் |

பூதத்தாழ்வார் |

பேயாழ்வார் |
மூவரும் ஆவர். சைவம், வைணவம் ஆகிய
இருசமயங்களின்
மறுமலர்ச்சி தமிழகத்தில்
பக்திப்பெருவெள்ளமாக ஓடப்போகிறது
என்பதை முன்கூட்டியே
உணர்த்தி நிற்பவை இவர்களின்
பாடல்களே. இவர்கள் காட்டிய
வழியிலேயே நாயன்மார்களும்
ஆழ்வார்களும் நடந்து பக்தியை
அதன் உச்சநிலைக்குக் கொண்டு
சென்றனர். “தமிழகத்திலே
பக்தியானது பொருளாதார - சமூக -
அரசியல் - சமயப்பேரியக்கமாக மாறியது. அதுகண்டு மன்னரும்
மாறினர்”
என்று க. கைலாசபதி குறிப்பிடுவது நாம் மனம்
கொள்ளத்தக்கது.
வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று
மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமணர் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான் |
என்று பாடுகிறது பெரியபுராணம். (காடவன் - பல்லவன்
மகேந்திர வர்மன்; கண்ணுதல் - சிவபெருமான்.) பல்லவ மன்னன்
மகேந்திரவர்மன் சமணப்பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக்
கோயில்கட்டினான் என்னும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.
பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்தின் விளைவையே இதில்
குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார். ஆதலின் இப்பாடல் கூறும் செய்தி
உண்மையே ஆகும்.
|