1) |
கர்மயோகம் என்றால் என்ன, ஞானயோகம் என்றால் என்ன,
பக்தியோகம் என்றால் என்ன என்பன பற்றியும் அவற்றிற்குக் கூறப்படும்
விளக்கம் பற்றியும் அறிந்திருப்பீர்கள். |
2) |
இம்மூன்றனைக்காட்டிலும் ஆழ்வார்கள் பெரிதும் வலியுறுத்திப்பேசியது
பிரபத்தி என்னும் சரணாகதி நெறியே என்று அறிந்திருப்பீர்கள். |
3) |
பிரபத்திக்குக் கூறப்படும் விளக்கம், அதனை உறுதியுடன்
கடைப்பிடிக்க வேண்டிய முறைபற்றியும் அறிந்திருப்பீர்கள். |
4) |
இந்நெறிகளுக்கு மேலாக, வைணவம் -ஆசார்யாபிமானம்
(ஆசிரியப்பற்று), சித்தோபாயம் என்னும் நெறிகளைப் பரிந்துரைப்பது பற்றியும் படித்திருப்பீர்கள். |
5) |
இப்பாடத்தின் முடிவில் வைணவ சமயம் - வைகானசம்,
பாஞ்சராத்திரம் என்னும் இருவகையான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதுபற்றியும் விரிவாக உணர்ந்திருப்பீர்கள். |