4.0 பாட முன்னுரை

இயேசுபெருமான் அளித்த நற்செய்தி மனிதகுலத்திற்குத்
தரப்பட்ட     மாபெரும்    அருங்கொடை.     இந்நற்செய்தி,
படைப்பிற்கெல்லாம் அறிவிக்கப்பட வேண்டுமென்பது இறைநியதி.
இயேசுபெருமான் அருளிய இந்நற்செய்தியினை ஏற்றுப் புதியதொரு
சமுதாயம் படைத்திட வேண்டும் என்ற அருங்கருத்தின்பால்
செயல்பட்டதே கிறித்துவம். தொடக்கத்தில் கிறித்துவம் ஆன்மிகக்
கோட்பாட்டினை மட்டும் ஏற்றுக்கொண்ட ஓர் அமைப்பாக
விளங்கவில்லை. அது ஒடுக்கப்பட்டோருக்காக, சுரண்டும்
வர்க்கத்தினரை எதிர்த்திடும் இயக்கமாகவே தோன்றிற்று;
வளர்ந்தது.