தமிழ்க் காப்பிய வகைகளில் எண்ணிச் சொல்லப்படும்
ஐந்து சிறுகாப்பியங்கள் பற்றி இந்தப் பாடம் பேசுகிறது.
இவற்றில் ஒன்றான ‘சூளாமணி’ சிறுகாப்பிய வகையில்
அடங்காத ‘பெருங்காப்பியம்’ என்பதை எடுத்துச் சொல்கிறது.
அதோடு இக்காப்பியங்கள் எழுந்த காலச் சூழல், எழுதிய
காப்பிய ஆசிரியர் வரலாறு, காப்பியக் கதை, காப்பியக்
கொள்கை, காப்பியம் உணர்த்தும் சமூக - சமய - அரசியல்
சிந்தனைகள் ஆகியன இப்பாடத்தில் தொகுத்துத்
தரப்பட்டுள்ளன. அதோடு இவற்றின் இலக்கிய நயமான
பாடல்களும் மாணவர்களின் சுவை உணர்வு கருதித்
தரப்பட்டுள்ளன.
சமண சமயத் துறவிகளின் செல்வாக்கு தமிழ்
இலக்கியத்தில் பதிவு பெற்றிருப்பதை இந்தப் பாடம்
தெளிவாகக் காட்டுகிறது. இவற்றிற்கான நோக்கங்களும்
பலவாக இருப்பதையும் இந்தப் பாடம் எடுத்துக் காட்டுகிறது.
ஒட்டு மொத்தமான மனித நேயம் இவற்றின் பாடுபொருளாக
அமைவதையும் இப்பாடம் விளக்கிக் காட்டுகிறது.
|