இசுலாமிய சமயத் தத்துவங்களையும் நெறிமுறைகளையும் காப்பியத்தில் சொல்வதோடு நின்றுவிடாமல் வாய்ப்பு வரும்போதெல்லாம் சமயப்பொறையுடன் பொதுவான கருத்துகளையும் உமறுப்புலவர் குறிப்பிட்டுச் சொல்கிறார். 4.4.1 பிற சமயத் தெய்வங்கள் பொதுவாகச் சமயச் சார்பான காப்பியங்களெல்லாம் அந்த அந்தச் சமயத்தைச் சார்ந்த தெய்வங்களைப் பற்றிப் பாடும். ஆனால் உமறுப் புலவர் பிற சமயத் தெய்வங்களைப் பற்றியும் பாடியுள்ளார். எடுத்துக்காட்டாக இலட்சுமியையும் காளியையும் கூட இசுலாமியத் தமிழ்க் காப்பியத்தில் இடம்பெறச் செய்துள்ளார். ● இலட்சுமியும் செல்வமும் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையார் கொடை அளிப்பதில் மேகம் போன்றவர். வீரமும் கல்வியும் வெற்றியும் மிக்கவர். செல்வம் பொருந்தியிருக்கும் அவரது வீட்டில் செல்வ நாயகியான இலட்சுமி பெருமையோடு அமர்ந்திருக்கிறாள் என்பதை,
(வனசத்து இலகு செல்வி = தாமரையில் இருக்கும் இலட்சுமி; முன்றில்= வீடு) எனப் பாடுகிறார், |