5.0 பாட முன்னுரை

இசுலாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்கள் என்ற தலைப்பில் புகழ்பெற்ற சீறாப்புராணம், அதன் தொடரான சின்னசீறா ஆகிய இரண்டைப் பற்றியும் முன்பாடத்தில் படித்தோம். இவை தவிர, பிற இசுலாமியக் காப்பியங்களும் சிறுகாப்பியங்களும்     இருபத்தாறு எனக் கணக்கிடுகின்றனர். இவற்றுள் முதல் மூத்த காப்பியம் கனகாபிசேகமாலை. அதன்பின் கி. பி. 1807 முதல் கி. பி. 1821- வரையுள்ள காலக்கட்டத்தில் தோன்றிய ஒன்பது காப்பியங்களில் மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் இயற்றியவை மூன்று காப்பியங்கள். அவை (i) இராஜ நாயகம் (ii) குத்பு நாயகம் (iii) தீன்விளக்கம் ஆகியவையாகும். இவை பற்றிய செய்திகளை இப்பாடத்தில் காண்போம்.