1.5 களவிற்குரிய கிளவித் தொகைகள் - II |
இந்தப் பகுதியில் இடந்தலைப்பாடு, பாங்கன் கூட்டன்,
பாங்கி
மதி உடன்பாடு, பாங்கியிற் கூட்டம் ஆகிய (6 முதல்
9
வரையிலான களவியல்) கிளவித் தொகைகளைக் காணலாம்.
களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டத் தலைவன்-தலைவி மீண்டும்
மீண்டும் சந்திக்கின்ற ஓர் இடம் இடந்தலைப்பாடு எனப்படும்.
இது மூன்று வகைப்படும்.
பாங்கனின் (தோழனின்) உதவியால் தலைவன் தலைவியைக்
கூடுவது பாங்கன் கூட்டம் எனப்படும்.
இஃது ஏழு வகைப்படும்.
அவை :
(1) |
சார்தல் |
- தலைவன் பாங்கனைச் சென்று
சேர்தல். |
(2) |
கேட்டல் |
- பாங்கன் தலைவனின் வருத்தம்
அறிந்து கேட்டல் |
(3) |
சாற்றல் |
- தலைவன், பாங்கனிடம்
தன்
வருத்தத்துக்கான காரணத்தைக்
கூறல். |
(4) |
எதிர்மறை |
- பாங்கன் தலைவனிடம் உனக்கு
இது தேவையற்றது
என்று கூறுதல். |
(5) |
நேர்தல் |
- பாங்கன் தலைவனின் கருத்துக்கு
ஏற்ப தலைவியிடம் தூதாகச்
செல்லுதல். |
(6) |
கூடல் |
- தலைவன் தலைவியைக் கூடுதல். |
(7) |
பாங்கியின் கூட்டல் |
- தலைவியைக் கூடிய தலைவன்,
அவளைத் தோழியர் கூட்டத்தோடு
அனுப்பி வைத்தல். |
1.5.3 பாங்கி மதி உடம்பாடு |
பாங்கி (தோழி), தலைவியின் உடல் வேறுபாடுகளைக் கண்டு
இது களவுப் புணர்ச்சியால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஐயம்
கொள்வாள். இந்த ஐயத்தைத் தோழி தன் மதியோடு (அறிவோடு)
உடன்படுத்தி ஆராய்ந்து உண்மை அறிவதே பாங்கி மதி
உடம்பாடு என்பர். இது மூன்று வகைப்படும்.
முன்னுற
உணர்தல் |
குறையுற
உணர்தல் |
இருவரும் உள்வழி
அவன் வர
உணர்தல் |
களவு
ஒழுக்கத்துக்குப்
பின் தன்
முன்னே
வந்து நின்ற
தலைவியைக்
கண்டு தோழி
உணர்ந்து
கொள்ளல். |
தலைவியைக்
கூடுவதற்குத்
தலைவன்
தோழியின்
உதவியை
நாடுவான். அதன்
மூலம் தலைவியின்
களவொழுக்கத்தைத்
தோழி உணர்ந்து
கொள்ளல். |
தானும் தலைவியும்
ஓரிடத்தில்
இருக்கும் பொழுது
தலைவன்
வருவதைக் கண்டு
தலைவியின்
களவொழுக்கத்தைத்
தோழி உணர்ந்து
கொள்ளல். |
பாங்கியின் (தோழியின்) உதவியால் தலைவன் தலைவியைக்
கூடுவது பாங்கியிற் கூட்டம் எனப்படும். இது 12 வகைப்படும்.
அவை:
(1) |
இரந்து பின் நிற்றல் |
- தலைவன் தோழியிடம் தன்
குறையைத் தீர்க்க வேண்டும்
என்று நயமாகக் கூறுதல். |
(2) |
சேட்படை |
- தலைவனின் வேண்டுகோளை
உடனடியாக ஏற்காது தோழி
மறுத்தல். |
(3) |
மடல் கூற்று |
- மடலேறுவேன் என்று
தலைவன் கூறுதல். |
(4) |
மடல் விலக்கு |
- மடலேற வேண்டாம் என்று
தோழி தலைவனிடம் வற்புறுத்தல். |
(5) |
உடம்படல் |
- தலைவனின் மனக்குறையை
நீக்கத் தலைவி உடம்படல். |
(6) |
மடற் கூற்று ஒழிதல் |
- தோழி உடம்படுத்திய பின்பு
மடலேறுவேன் என்று கூறுவதைத்
தலைவன் கைவிடுதல். |
(7) |
குறைநயப்பித்தல் |
- தலைவனின் மனக்குறையைத்
தலைவியிடம் தோழி எடுத்துக்
கூறி அக்குறையைப்
போக்குவித்தல். |
(8) |
நயத்தல் |
- அவ்வாறு தோழி கூறிய உடன்
முதலில் தலைவி மறுத்துப் பின்பு
உடம்படல். |
(9) |
கூட்டல் |
- தலைவனிடம் முன்பே
கூறியவாறு குறியிடத்திற்குத்
தலைவியைத் தோழி அழைத்துச்
செல்லுதல். |
(10) |
கூடல் |
- குறியிடத்தில் தலைவனும்
தலைவியும் கூடி மகிழ்தல். |
(11) |
ஆயம் கூட்டல் |
- கூடி மகிழ்ந்த தலைவியைத்
தோழியர்க் கூட்டத்தில் தோழி
சேர்த்தல். |
(12) |
வேட்டல் |
- தலைவனை விருந்துண்ண
அழைத்தல். |
|