2.0 பாட முன்னுரை

அறிவுசால் மாணவர்களே ! அகப்பொருள் ஒழுக்கம் களவு,
கற்பு என்ற இரு கைகோளை உடையது என்பது உங்களுக்குத்
தெரியும். அவற்றுள் களவு என்ற கைகோள் பற்றி சென்ற
களவியல் பாடத்தில் படித்தீர்கள். இப்பொழுது மற்றொரு
கைகோளான கற்பு பற்றி இப்பாடத்தில் படிக்கப் போகிறீர்கள்.
கற்பு பற்றிய செய்திகளை எடுத்துரைக்கும் இயல் கற்பியல் ஆகும்.
இவ்வியல், நம்பி அகப்பொருளின் நான்காவது இயலாக
அமைந்துள்ளது. இவ்வியலில் 10 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன.