2.5 பிரிவின் வகைகள்

இந்த ஐந்து பிரிவுகளும் ஒன்பது வகைப்படும். அவை,

(1) பிரிவு
அறிவுறுத்தல்
- தலைவன் பிரியப் போவதைத்
தோழி தலைவிக்கு உணர்த்துதல்.
(2) பிரிவு
உடன்படாமை
- அதைத் தலைவி ஏற்க மாட்டாள்.
(3) பிரிவு
உடன்படுத்தல்
- தலைவன் பிரிவுக்குத் தலைவியைத்
தோழி உடன்படுத்தல்.
(4) பிரிவு
உடன்படுதல்
- தலைவன் பிரிவுக்குத் தலைவி
உடன்படுதல்.
(5) பிரிவுழிக்
கலங்கல்
- தலைவன் பிரிந்த பொழுது தலைவி
வருத்தம் கொள்ளல்.
(6) வன்புறை - பிரிவை நினைத்து வருந்துகின்ற
தலைவியைத் தோழி பிரிவைப்
பொறுத்துக்     கொள்ளுமாறு
வற்புறுத்திக் கூறுதல்.
(7) வன்பொறை - தலைவன் பிரிவால் ஏற்பட்ட
மிகுந்த துன்பத்தைப் பெரிதும்
முயன்று பொருத்துக் கொள்ளுதல்.
(8) வரும் வழிக்
கலங்கல்
- பிரிந்து சென்ற தலைவன் சென்ற
காரியம் முடிந்து திரும்பி வருகின்ற
பொழுது தலைவியின் நிலையை
நினைத்து வருந்துதல்.
(9) வந்துழி
மகிழ்ச்சி
- பிரிந்து சென்ற தலைவன் மீண்டும்
வந்தது கண்டு தலைவியும் தோழியும்
மகிழ்தல்.

2.5.1 பிரிவு பற்றிய சில பொதுக் கிளவிகள்

  • ஓதல் பிரிவு மூன்று ஆண்டுக் காலம்.
  • தூது, துணைவயின், பொருள்வயின் காரணமாக ஏற்படும்
    பிரிவுகள் ஓர் ஆண்டுக் காலம்.
  • இக்கால எல்லை நீண்டால் தலைவன் தலைவிக்குத்
    துன்பங்கள் ஏற்படும்.
  • பிரிவுத் துன்பம் காரணமாக தலைவியின் உருவத்தில்
    மாற்றங்கள் ஏற்படும்.
  • பிரிவுக் காலத்தில் தன் துன்பங்களைத் தலைவன்
    பாகனிடத்துக் கூறுவான்.
  • தலைவன் தலைவியோடு கூடி இருக்கும் பொழுது வருகின்ற
    கார் பருவத்தைக் (மழைக் காலத்தை) கண்ட தலைவன்
    அப்பருவத்தை வாழ்த்திக் கூறுவான்