தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(3) |
நாகபந்தம் சித்திரகவி பாடப்படத் தேவையான ஒழுங்கு முறைகள் யாவை? |
|
இது இரண்டு பாம்புகள் இணையும் அமைப்பில் பாடப்படுவதாகும். இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும், மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இக்கவியாகும். எனவே நாகபந்தம் என்பது இரண்டு வெண்பாக்களின் இணைப்பால் அமைவது என்பது பெறத்தக்கது. (நாகம் = பாம்பு ; பந்தம் = கட்டுதல்) |