|
மடத்தின் தலைவர் 'மடபதி'
அல்லது 'மடாதிபதி'
எனப்பட்டார். மடத்தை ஒட்டியுள்ள பகுதிகள் ‘மடவளாகம்’
என்றும், மடத்திற்குரிய கொடை நிலம் ‘மடப்புறம்’ எனவும்
கூறப்பட்டன. மடங்களில் பூசிக்கும் ஆண்டார், கும்பிட்டிருக்கும்
ஆண்டார் ஆகியோர் இருந்தனர். அவர்கள் தவசியர் என்றும்
கூறப்பட்டனர். மடத்து நிர்வாகத்திற்குச் சில இடங்களில் ஏழுபேர்
கொண்ட குழு இருந்தது. அவர்கள் ‘மடத்துச் சத்தப் பெருமக்கள்’
எனப்பட்டனர்.
|