2.6 தொகுப்புரை


    இப்பல்லவர் வரலாற்றுப் பாடத்தில் பல்லவர் யார் என்பது
பற்றிய கருத்துகள், அவர்கள் ஆட்சி     செய்த காலம்,
இருகிளையினர் ஆட்சி, கால வரிசைப்படி பல்லவ அரசர்கள்
காலத்துச் சாதனைகள் ஆகியன விவரிக்கப் பெற்றுள்ளன.

    பல்லவர் ஆட்சிமுறை எவ்வாறு திகழ்ந்தது என்பதும் அவர்கள்
கால நாட்டுப் பிரிவுகள், அரசு உரிமை, பட்டப் பெயர்கள்,
சமயநிலை, பல்லவர் இலச்சினை, உயர்நிலை அலுவலர்கள், நீதி
மன்ற அமைப்புகள் ஆவணத்துறை அமைப்பு, படையமைப்பு,
ஊர்கள் அமைப்பு, நிலஅளவை முறையும் பதிவுகளும், காசுகள்,
கல்விக்கூடங்கள், இலக்கிய வளர்ச்சி, கோயிற்கலை மற்றும்
கவின்கலைகள் எவ்வாறு திகழ்ந்தன என்பதும் இப்பாடத்தில்
கூறப்பெற்றுள்ளன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

பல்லவப் பேரரசர்கள் பெரிதும் சார்ந்திருந்த
சமயம் எது?

(விடை)
2) பல்லவர் இலச்சினைகளில் காணப்பெற்ற உருவம்
என்ன?
(விடை)
3) கரணம், அதிகரணம் பற்றி விளக்குக. (விடை)
4) பல்லவர் காலத் தமிழ் இலக்கியப் படைப்புகள்
யாவை?
(விடை)
5)
விசித்திரசித்தன் என்ற பட்டம் பூண்டமன்னன்
யார்? அவன் கல், மண், உலோகம், சுதை, மரம்
இன்றிக் கோயில் எடுத்ததாகக் கூறும் கல்வெட்டு
எங்குள்ளது?
6)
காஞ்சியில் உள்ள பல்லவர் கட்டுமானக்
கோயில்களில் மிகச் சிறந்ததும் சிற்பங்கள்,
ஓவியங்களால் அழகு செய்யப்பட்டதுமான
கோயில் எது?