தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின் |
||||||
4.4.1 சமயக் காப்பியம் | ||||||
தமிழில் தோன்றிய பழைய இலக்கியமான சங்க இலக்கியம் சமயச் சார்பற்றது. சிலப்பதிகாரத்தில் பல சமயச் சிந்தனைகள் சொல்லப்பட்டாலும், எச்சமயத்தையும் பரப்பும் நோக்கம் அதன் ஆசிரியர்க்கு இல்லை. ஆனால் மணிமேகலை, பௌத்த சமயத்தைப் பரப்புதலையே முதன்மை நோக்கமாகக் கொண்டது. இத்தகைய சிறப்புப் பெற்ற முதல் நூல் மணிமேகலை. |
||||||
|
||||||
சாத்தனார் தம் காலத்தில் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்த பல்வேறு சமயத் தத்துவ மரபுகள் அனைத்தையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மரபுகளாவன சைவம், வைணவம், வைதீகம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகியனவாகும். |
||||||
|
||||||
|
புத்த பெருமானின் புகழை இக்காப்பியம் முழுவதும் நாம் காணலாம். ஐந்தாம் காதையும் பதினோராம் காதையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. இவ்விரு காதைகளிலும் அவர் அருளறம் பூண்டவர், அறவழியை ஊட்டியவர், காமனைக் கடந்தவர், தனக்கென |
|||||
வாழாதவர், பிறர்க்கென வாழ்பவர்,
துறக்கமும்
வேண்டாதவர், தீய சொற்களைக் கேட்க விரும்பாதவர் என்று பலவாறு புகழப்பட்டுள்ளார். |
||||||
|
||||||
யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகியவற்றை இக்காவியம் ஆழமாகக் கற்பிக்கின்றது. சக்கரவாளக் கோட்டத்தை இதற்காகவே புலவர் அறிமுகம் செய்தார்.
என்பது சாத்தனார் அறிவுரை. |
||||||
4.4.2 பத்தினியின் சிறப்பு | ||||||
கண்ணகி வாயிலாகப் பத்தினிப் பெண்ணின் தெய்வீக ஆற்றலை இளங்கோவடிகள் காட்டினார். அவள் தீயை ஏவ, அத்தீ மதுரையை எரித்தது. ஆனால் சாத்தனார் படைத்த ஆதிரையைத் தீயும் நெருங்க அஞ்சிற்று. இது சாத்தனார் வெளிப்படுத்தும் கற்பின் மாண்பு. அரசர் முறை செய்யவில்லையேல், பெண்களுக்குக் கற்பு சிறக்காது என்றும் கூறுகின்றார். கணவன் இறந்தவுடன் உயிர் விடும் தலையாய கற்புடையாரையும், உடன்கட்டையேறி உயிர்விடும் இடையாய கற்புடையாரையும், கைம்மை நோன்பு இயற்றி மறுமையிலும் கணவனைக் கூடத் தவம் புரியும் கடையாய கற்புடையாரையும் இவர் அறிமுகப்படுத்துகின்றார். |
||||||
4.4.3 சீர்திருத்தக் கொள்கை | ||||||
மணிமேகலை மாபெரும் சீர்திருத்தக் காப்பியமாகும். சங்க காலத்தில் பெருவழக்காக இருந்த கள்ளும், ஊன் உணவும் சமண பௌத்த சமயங் களால் பெரிதும் கண்டிக்கப்பட்டன. இவ்வகையில் திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாகச் சிறந்து நிற்பவர் சாத்தனாரே. சாதுவன், நாகர்குருமகனுக்குக் கூறிய அறிவுரைகள் பல. அவற்றுள் இன்றியமையாதவை கள்ளும் ஊனும் கைவிடத்தக்கவை என்பதாகும்.
என்றும்,
என்றும் கூறிய சாதுவன்,
என்று அதன் பலனையும் எடுத்துக் கூறினான். |
||||||
4.4.4 பசிப்பிணி நீக்கல் | ||||||
மணிமேகலைக் காப்பியம்,
என வாழ்த்தித் தொடங்குகின்றது.
என்பது சாத்தனார் கோட்பாடாகும். எனவே தான் ‘மண்திணி
இக்கொடுமையை ஒழித்தலே உலகிலுள்ள அறத்திலெல்லாம்
என்று வற்புறுத்துகின்றார். மேலும் பிறர் உதவியில்லாமல் வாழ
என்ற பகுதியில், ஆபுத்திரன், இயலாத மக்கள் உண்டது போக, இங்ஙனம் பசியின் கொடுமையை எடுத்துக்காட்டி, அதை |
||||||
4.4.5 பண்பாட்டுப் பெட்டகம் | ||||||
தமிழ்ப்பண்பாட்டுக் கருவூலமாக மணிமேகலை விளங்குகின்றது. புகார், வஞ்சி ஆகிய நகர்களின் பண்பாட்டுச் சிறப்பு அழகாகக் காட்டப்பட்டுள்ளது. அறங்கூறவையம், ஐம்பெருங்குழு, எண்பேராயம் முதலியவையும், பொற்கொல்லர், தச்சர், குயவர், மணித்தொழிலாளர்,ஓவியர் முதலான பல்வினைஞர் தம் இயல்பும், திறமும் விளக்கப்பட்டுள்ளன. மாதவியின் திறன் பற்றிக் கூறுமிடத்தில் நாட்டியக் கலைஞர்க்குரிய அறுபத்து நான்கு கலைகளும் விளக்கப்பட்டுள்ளன. பத்தினிப் பெண்டிரின் வரலாறுகள் பல இடம் பெற்றுள்ளன. அரசியல் அறம் குறித்த செய்திகளும், ஆன்மீகச் செய்திகளும் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளன. திருவிழாக்கள், பொழுது போக்குகள் முதலியனவும் விளக்கம் பெற்றுள்ளன. |
||||||
4.4.6 சாத்தனாரின் கற்பனைத் திறன் | ||||||
மணிமேகலை, சிலம்பைப் போல் கலைத்தன்மை கொண்ட நூலன்று. மாறாக, இது அறத்தன்மை கொண்ட நூல். ஆயினும், சாத்தனார் தம் கலையுணர்வையும், கற்பனை ஆற்றலையும் ஆங்காங்கே காட்டத் தவறினாரல்லர். மலர் வனம் புக்க காதையில், உவவனத்தின் அழகை விளக்குகையில், பின்வருமாறு அதனை வருணிக்கின்றார்.
இந்நூலின் ஐந்தாம் காதை, புகார் நகரத்தையும் அந்திப் |