| 
 
   தமிழகத்தில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே பாறை 
 ஓவியங்கள் கிடைத்துள்ளன. கிடைத்த பாறை ஓவியங்களில் 
 பெரும்பான்மையான     ஓவியங்கள்     பெருங் கற்காலத்தைச் 
 சேர்ந்தவையாக உள்ளன. விலங்கினங்கள், மனித ஓவியங்கள், 
 வேட்டை ஓவியக் காட்சிகள் எனப் பல்வேறு 
 விதமாக அந்த 
 ஓவியங்கள்
 அமைந்துள்ளன. இவை தவிரக் குறியீடுகள் முதலிய 
 ஓவியங்களும் 
 கிடைத்துள்ளன. இவை சிந்துச் சமவெளி 
 அகழ்வாய்வில் கிடைத்த
 எழுத்தமைப்பை ஒத்துள்ளன என்பது  
 நோக்கத் தக்கதும், மேலும் 
 ஆராயத் தக்கதும் ஆகும்.  
 தொல்லியல் துறையினரால் நடத்தப்பட்ட
 பல அகழ்வாய்வுகளிலும் 
 பல விதமான வரைவுகள் கிடைத்துள்ளன.
 அவற்றில் மட்பாண்ட 
 வண்ணப் பூச்சுகள், மட்பாண்டக் கீறல்
 வரைவுகள், வண்ண 
 வரைவுக் கல்மணிகள் முதலியன 
 சிறப்புடையன ஆகும். 
 இத்தகு வரைவுகளும் பாறை 
 ஓவியங்களும் பிற நாடுகளில் 
 கிடைத்துள்ளவற்றோடு 
 ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்குக்  
 காலத்தால் 
 பழைமையானவை ஆகும். இத்தகு     பாறை 
 ஓவியங்களே
 பிற்காலத்தில் வளர்ந்த ஓவிய, சிற்பக் கலைகளுக்கு 
 அடிப்படையாய்
 அமைந்தன. 
   |