![]() |
|
1 பழந்தமிழ் நூல்களில் சமணம் |
|
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
|
|
சமணசமயம்
தமிழகத்தில் தோன்றிய சமயமா? அல்லது |
|
|
பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியமும் சங்க இலக்கியங் |
|
இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
| நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலேயே சமண சமயக் கூறுபாடுகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தொகுத்துக் கொள்ளலாம். |
|
| சங்க இலக்கியங்களாகிய
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் சமண சமயக் கருத்துகள் இடம் பெறுவதால் சமண சமயம் அக்காலத்திலேயே தமிழகத்தில் வேரூன்றி யிருந்ததை அறிந்து கொள்ளலாம். |
|
| அனைத்துச் சமயங்களும் சங்க காலத்தில் ஒற்றுமை யாகவே இருந்துள்ளன. சமயப் பொறையே மேலோங்கி யிருந்தது. சமயக் காழ்ப்புக்குச் சங்ககாலத்தில் இடமில்லை என்பதை எடுத்துக் காட்டலாம். |
|
| திருக்குறள் முதலான பெரும்பாலான
அறநூல்கள் சமண சமயத்தின் கொல்லாமை அறத்தையே பெரிதும் போற்றி யுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டலாம். |
|
| காப்பியங்கள், கதைகளின்
வழியாகச் சமண சமயக் கோட்பாடுகளை விளக்கிச் செல்வதைத் தெரிந்து கொள்ளலாம். |
|
![]() |