c01123: பாரதியின் உலகளாவிய நோக்கு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
 |
பாரதியின் உள்ளம் பரந்தது.
அனைத்தையும் தழுவிச்
செல்லும் தன்மை வாய்ந்தது. மக்கள் மீதான பாரதியின்
அளப்பரிய அன்பும் அக்கறையும் அவரை உலகளாவிய
நோக்குடையவராக உருவாக்கியது.
பாரதியின் உலக நோக்கிற்கு வலிமை சேர்த்தது பாரதியின்
புதிய அத்வைதக் கோட்பாடு. அதற்கு மேலும் உரமூட்டியது
மேலை நாட்டுக் கவிஞர்களின் உலகளாவிய சிந்தனைகள்.
இதன் விளைவாக விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்
ஆகிய முப்பெரும் கோட்பாடுகளைத் தன்வயப்படுத்திக்
கொண்டார் பாரதி.
இவையனைத்தும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.
இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
1. |
உலகளாவிய நோக்கு எது என்பதைத்
விவரிக்கலாம்.
|
2. |
பாரதியின் உலகநோக்கிற்கு அடிப்படையாய்ப்
புதிய
அத்வைதக் கோட்பாடு அமைந்ததை விளக்கலாம்.
|
3. |
பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு
வலுவூட்டிய
மேலைநாட்டு அறிஞர்களைப் பட்டியலிட்டுக் காட்டலாம்.
|
4. |
பாரதியின் முப்பெரும் கோட்பாடுகளை இனங்கண்டு
தொகுத்துக் கொடுக்கலாம்.
|
5. |
பாரதியின் உலகளாவிய நோக்கின் தனிச்சிறப்பினை
அடையாளம் காணலாம்.
|
|