C01132 : பாரதிதாசனின் சமுதாயம்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

பாரதிதாசனின் பொதுவுடைமை நோக்கை இப்பாடம்
எடுத்துரைக்கின்றது; சாதி வேறுபாட்டுணர்வைக் கண்டித்துச்
சாய்க்கும் (வீழ்த்தும்) அவர் கவிதைகளின் சாற்றைப் பிழிந்து
தருகின்றது; மத வெறியால் குலைந்து போகாதீர் என்று குரல்
கொடுக்கும் அவர் பாடல்களை இனம் காட்டுகிறது.
பகுத்தறிவு என்ற உலகம் நோக்கி மனித சமுதாயம் நடையிடத்
தூண்டும் அவர் முழக்கங்களை எடுத்துரைக்கின்றது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கவிஞன் ஒருவனின் உள்ளத்தை உணரலாம்.
  • எது சீர்திருத்தம் என அறியலாம்.
  • சமூக இருள் எது? சமூக அவலம் எது? எனப்புரிந்து
    கொள்ளலாம்.
  • வாழ்க்கையின் செம்மை எவற்றின் வழி எய்தப்படும்
    என்பதைக் கவிஞன் காட்டும் நெறியிலிருந்து தெளியலாம்.
  • புன்மை எது புரட்சி எது என விளங்கிக் கொள்ளலாம்.
  • தமிழ்ச் சமூகத்தின் நிகழ்காலம் எப்படிப்பட்டது என்றும்
    அச்சமூகம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க
    வேண்டுமென்றும் கண்டு கொள்ளாமல்