2.0 பாட முன்னுரை
நண்பர்களே! சென்ற பாடத்தில் நாம் சிற்றிலக்கியம்
என்பது பற்றிப் பார்த்தோம் அல்லவா? அந்தச் சிற்றிலக்கிய
வகையினுள் ஒன்று ÔதூதுÕ இலக்கியம் ஆகும். தூது இலக்கியம்
அகப்பொருள் சார்புடைய சிற்றிலக்கிய வகை ஆகும்.இத்தகைய
தூது இலக்கியம் பற்றி இந்தப் பாடத்தில் பார்ப்போமா?