1.1.2 பரணியின்
இலக்கணம்
பரணியின் இலக்கணம் பற்றித் தொல்காப்பியம்
குறிப்பிடவில்லை. இருந்தாலும் 'யானை மறம்' என்ற
துறையைச் சுட்டி உள்ளது. யானைகளின் வெற்றியைப்
பாடுவது இந்தத் துறை. சங்க இலக்கியங்களில் பரணி
இலக்கியக் கூறுகள் காணப்படுகின்றன. போர்க்களத்து வீர
நிகழ்ச்சிகள் - பேய்களின் நிகழ்ச்சிகள் - முதலியவற்றைச்
சுட்டலாம்.
பரணி இலக்கியத்திற்கான இலக்கணம் பாட்டியல்
நூல்களில்தான் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நண்பர்களே!
இதுபற்றிய சில செய்திகளை இப்பொழுது
தெரிந்து
கொள்வோம்.
|
|
இலக்கண
விளக்கம்
ஆனை
ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி
(இலக்.வி. 839) |
அமர் - போர்; மானவன்
- படைவீரன்.
என்று இலக்கண விளக்கம் கூறியுள்ளது. போரில் ஆயிரம்
யானைகளைக் கொன்ற வீரனின் வெற்றியைப் பாடுவதே பரணி
- என்பது இதன் பொருள்.
பன்னிரு பாட்டியல்
எழுநூறு யானைகளைக் கொன்ற ஏந்தலை
(தலைவனை)ப்
பாராட்டுவதே பரணி என்று பன்னிரு பாட்டியல்
கூறியுள்ளது.
ஏழ்தலை பெய்த நூறுஉடை இபமே
அடுகளத்து அட்டால் பாடுதல் கடனே
(பன்னிரு. 243) |
இபம் - யானை, அடுகளம்
- போர்க்களம், அட்டால் -
கொன்றால், கடன் - முறைமை.
யானையைக் கொன்ற போர்க்களம் அல்லாத பிற
போர்க்களங்கள் பரணி பாடுவதற்குத் தகுதி உடையன அல்ல.
இதனை,
யானை சாய்த்த அடுகளத்து அல்லது
யாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே
(பன்னிரு. 242) |
என்ற பாடலால் அறிய முடிகிறது.
வெண்பாப் பாட்டியல்
வெண்பாப் பாட்டியல் பரணியின் பாட்டுடைத்
தலைவனைப்
பற்றிப் பேசியுள்ளது.
மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறு
அட்ட
ஆண்டகையைப் பரவி ஆய்ந்துரைக்க
(வெண்பா
: 28) |
மூலி - வலிமை, களிறு - யானை, அட்ட - கொன்ற,
ஆண்டகை
- வீரன், பரவி - புகழ்ந்து,
என்று கூறியுள்ளது. 'போர்க்களத்தில் ஊறுபாடு
(சேதம்) இன்றி
இருத்தல் வேண்டும்; பகைவர் யானைகளை அழித்தல்
வேண்டும்; போரில் வெற்றிவாகை சூட
வேண்டும்; இவ்வாறு
திகழ்பவனே பரணியின் பாட்டுடைத் தலைவன் ஆவான்.'
1.1.3 பரணியின் அமைப்பு
பரணி் இலக்கியம் பத்து உறுப்புகளைப் பெற்று
விளங்குகிறது. பத்து உறுப்புகள் அனைத்துப் பரணி
நூல்களுக்கும் உரியன, ஒரு சில பரணிகளில்
இந்தப்பத்து
உறுப்புகள் அல்லாது ஒரு சில உறுப்புகள் கூடுதலாகவும்
உள்ளன. இந்த உறுப்புகள் பண்டைய
பரணி நூல்களுக்கே
பொருந்தும். பிற்கால நூல்களுக்குப்
பொருந்தாது. சான்றுக்குச்
சீனத்துப் பரணியை இங்குக் கூறலாம். நண்பர்களே! இனிப்
பத்து உறுப்புகள்
பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.
மேற்கூறிய பத்து உறுப்புகள் பண்டைய பரணி நூல்கள்
அனைத்திற்கும் உரியன. இவை அல்லாமல் இந்திரசாலம்
(பேயின் மாயாசாலம் பற்றியது), இராசபாரம்பரியம் (சோழர்
பரம்பரை பற்றிய விளக்கம்), அவதாரம் (பாட்டுடைத்
தலைவனின் பிறப்பு பற்றியது) ஆகிய உறுப்புகள்
கலிங்கத்துப்
பரணியில் காணப்படுகின்றன.
பரணியின் உறுப்புகள் கடவுள் வாழ்த்து
முதலாக
ஒரே
அமைப்பாக எல்லாப் பரணி நூல்களிலும் காணப்படவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கது.