பரணி நூல்களில் காலத்தால் முற்பட்டது இந்நூல். முதல்
குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து
வெற்றி பெற்றான். இந்த வெற்றியைச் சிறப்பித்துப்
பாடியதே
கலிங்கத்துப் பரணி ஆகும். நண்பர்களே இனி வரும்
பாடப்பகுதியில் கலிங்கத்துப் பரணி பற்றி மூன்று
நிலைகளில்
செய்திகளை அறிய இருக்கிறோம்.
1) கலிங்கத்துப் பரணி - நூலாசிரியர் வரலாறு
2) கலிங்கத்துப் பரணி - பாட்டுடைத் தலைவன்
3) கலிங்கத்துப் பரணி - இலக்கியச்
சிறப்புகள்1.2.1 நூலாசிரியர்
கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் சயங்கொண்டார்
ஆவார் 'பரணிக்கு ஓர்
சயங்கொண்டான்' என்று பலபட்டடைச்
சொக்கநாதப்
புலவர் இவரைப் பாராட்டி உள்ளார். இவரது
இயற்பெயரை
அறிய முடியவில்லை. புலவர் பலரும்
சொற்போர் நிகழ்த்துவது வழக்கம். இத்தகு சொற்போரில்
வென்றதால் இவருக்குச் சயங்கொண்டார் என்ற பெயர்
ஏற்பட்டிருக்க வேண்டும் என்பர். இவருடைய ஊர் தீபங் குடி.
குலோத்துங்கனும் சயங்கொண்டாரும்
குலோத்துங்கன் கலிங்கத்துப் போரில்
வெற்றி பெற்றான்.
வெற்றிக்குப் பின்பு சயங்கொண்டாரோடு உரையாடிக்
கொண்டிருந்தான். அப்போது புலவரை நோக்கி, 'புலவரே!
கலிங்கத்தைச்
சயங்கொண்டமையால் நானும் சயங்கொண்டான்
ஆயினேன்' என்று கூறினான். இதனைக் கேட்ட
சயங்கொண்டார் உளம் மகிழ்ந்தார்.
'அப்படி ஆனால் சயங்கொண்டானைச்
சயங்கொண்டான்
பாடுவது மிகப் பொருத்தம்' என்று
கூறிக் கலிங்கத்துப்
பரணியைப் பாடினார் என்பர்.
கலிங்கத்துப் பரணியும் பொன் தேங்காயும்
சயங்கொண்டார் பரணி பாடி முடித்தார். பின்பு
குலோத்துங்கன் அவையில் அரங்கேற்றம் செய்யத்
தொடங்கினார். அந்தக் காலத்தில் ஒருவர் நூல்
செய்தால்
பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய
வேண்டும்; பலரின்
ஒப்புதலைப் பெற வேண்டும்.
இம்மரபினைத் தொல்காப்பிய
அரங்கேற்றத்தில்
இருந்தே காண்கிறோம்.
|