உலக உருவாக்கம்
இவ்வாறாக உலகப் படைப்பையே மீனாட்சியின்
சிற்றில் |
இன்னமுதமும் சமைத்து அன்னைநீ பன்முறை (மீனா.பிள். 15) |
2.4.4 காப்புக் கடவுள் பாண்டிய நாட்டில் புலவர்கள் அறிவுடன்
படைத்த தமிழ் |
முதுசொல் புலவர் தெளித்த பசுந்தமிழ் (மீனா.பிள். 31) |
(முது = பழைய, முளரி = தாமரை, வசுந்தரை = பூமி, கலி = வறுமை, அதிர = அதிர்ச்சியடையும்படி, அறங்கடை = பாவம், செழியர் = பாண்டியர், அபயர் = சோழர்) பழந்தமிழ் நூல்களைப் பாதுகாப்பவளாகவும், பாண்டிய நாட்டைக் காப்பவளாகவும், உயிர்கள் பாவத்தில் மூழ்காமல் காப்பவளாகவும் காட்சியளிப்பவள் மீனாட்சி என்பது சிறப்புடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. |
2.4.5 பாண்டியன் பெற்ற பெருவாழ்வு
|
வருக! வருகவே! நறுமணம் கமழும் கூந்தலை உடைய பெண் யானையே |
பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தல் பிடியே வருக முழுஞானப் பெருக்கே வருக பிறை மௌலிப் பெம்மான் முக்கண் சுடர்க்கு இடுநல் விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்தின்றி விளைக்கும் பரம ஆனந்தத்தின் விளைவே வருக....... ......... பிறவிப் பெரும்பிணிக்கு ஓர் மருந்தே வருக பசுங்குதலை மழலைக் கிளியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெரு வாழ்வே வருக வருகவே! (மீனா.பிள். 62) |
![]() |
(இறைக்கும் = சிதறும், நறை = மணம், பெருக்கு = வெள்ளம், மௌலி = முடி, பெம்மான் = சிவன், மும்முதல் = மும்மூர்த்திகள்/சிவன், பிரம்மா, விஷ்ணு, வித்து = விதை, குதலை = மழலை, மலயத்துவசன் = பாண்டியமன்னன்) இதில், மீனாட்சி ஞானம் உடையவள், சிவன், திருமால், பிரம்மா ஆகிய மூவர்க்கும் மூலமானவள், அடியவர் பிறவி நோய்க்கு மருந்து போன்றவள் என்பன போன்ற மீனாட்சியின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. |