3.4.1 குடிச்சிறப்பு மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன்
ஆகியோரின் மூத்த பள்ளியின் தொல்குலம் சித்திரா நதியானது முக்கூடலுக்கு வடப் பக்கமாக ஓடுவது. அதற்குத் தென்பக்கமாக ஓடுவது பொருநை ஆறு ஆகும். இவ்விரு நதிகளும் தோன்றி ஓடிவந்து முக்கூடலில் ஒன்று கலந்த காலம் மிகத் தொன்மையான காலம் ஆகும். உலகம் தோன்றிய தொடக்கக் காலத்திலேயே அவை ஒன்று கலந்தன. அப்படி அவை ஒன்று கலந்த காலம் தொட்டு வழி வழியாகத் தோன்றி வரும் மிகப் பழமையான குடும்பத்தில் பிறந்தவள் மூத்தபள்ளி ஆவாள். (முக்.பள். 13) இளைய பள்ளியின் பெருமை செஞ்சி நாட்டிலும, கூடலாகிய மதுரை நாட்டிலும் தஞ்சை நாட்டிலும், தம் ஆணையைச் செல்வாக்குடன் செலுத்தும் ஆட்சியாளன் வட மலையப்பப் பிள்ளையன் ஆவான். அவர் ஊரும் இளையபள்ளி ஊரும் ஒன்றே ஆகும். வடமலையப்பப் பிள்ளையன் உலக நன்மைக்காக ஐந்து குளங்களை வெட்ட நினைத்தான். குளம் வெட்ட, சக்கரக்கால் நிலை இட்ட போது (குளம் வெட்டுவதற்குரிய எல்லைகளை அளந்து எல்லைக் கற்கள் பதிப்பித்த போது) அந்த நாளிலேயே இளைய பள்ளி பண்ணையில் வந்து சேர்ந்தாள் என்று இளைய பள்ளியின் பெருமை பேசப்பட்டுள்ளது. (முக்.பள். 15). பள்ளன் பள்ளனின் பெருமை சமய உணர்வு அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. முக்கூடல் அழகர் திருவடிகளைக் கருதாத மனத்தை உடையோரும் உள்ளனர். அவர்களின் மனத்தைத் தரிசு நிலம் என்று எண்ணி, கொழுப் பாய்ச்சி உழுபவன் பள்ளன் ஆவான். சுருதிகள் போற்றும் எட்டு எழுத்துகள் (ஓம் நமோ நாராயணாய) வைணவத்தில் முதன்மை பெற்றவை. இந்த எழுத்துகளைப் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாத துட்டர்களின் காதுகளைப் பாம்புப் புற்றுகள் என்று கருதி வெட்டி எறிபவன் பள்ளன். பெருமானுடைய நூற்று எட்டுத் திருப்பதிகளையும் வலம் செய்து வணங்காதவர் கால்களை வடத்தால் பிணித்து ஏர்க்காலில் சேர்த்துக் கட்டுபவன் பள்ளன். திருவாய்மொழிப் பாசுரங்களைக் கல்லாதவர்களை இருகால் மாடுகளாக ஆக்கி ஏரிலே பூட்டித் 'தீத்தீ' என்று கோலால் அடித்து ஓட்டுபவன் பள்ளன். இவ்வாறாகப் பள்ளனின் பெருமை கூறப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் பாடல் விளக்கக் காணலாம்: |
ஒருபோதும் அழகர் தாளைக் (முக்.பள். 12) |
(போது = பொழுது, தாள் = திருவடி, வன்பால் = வரட்டுநிலம், கொழு = உழும் கருவி, சுருதி = வேதம், கொட்டு = மண்வெட்டுங்கருவி, பதிநூற்றெட்டு = வைணவத் திருத்தலங்கள் 108, வடம் = கயிறு, திருவாய்மொழி = வைணவ இலக்கியம். ஆண்டே = தலைவனே) |