உலா என்னும் சொல் 'உலா வருதல்' எனும் குறிப்பு 4.1.1 உலாவின் இலக்கணம் உலா எனும் சிற்றிலக்கியம் தனியொரு இலக்கியமாகப் தொல்காப்பியத்தில் உலா இலக்கணம் உலாவிற்கான லக்கணம் தொல்காப்பியத்திலேயே அமைந்துள்ளது. |
ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமையான (தொல். பொருள். புறம். 25) |
பாட்டியல் நூல்களில் உலா இலக்கணம் அவிநயம், பன்னிரு பாட்டியல் முதலான பாட்டியல் நூல்கள் உலா பற்றி விரிவான விளக்கங்களைக் கூறி உள்ளன. பன்னிரு பாட்டியல் உலா இலக்கியப் பாடுபொருளை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது. |
![]() |
முதல் நிலை முதல் நிலைப் பகுதியில் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் கூறப்படும். பாட்டுடைத் தலைவனின் குடிச்சிறப்பு - நீதிமுறை - கொடைப்பண்பு - உலாச் செல்ல நீராடுதல் - நல்ல அணிகளை அணிதல் - நகர் முழுவதும் மக்கள் வரவேற்றல் - நகர வீதிகளில் களிறு முதலியவற்றின் மீது ஏறி வருதல் - முதலிய செய்திகள் இப்பகுதியில் பாடப் பெறும். பின் எழு நிலை பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது பெண்டிர் அவன் மீது காதல் கொண்டு வாடுவர். இப்பகுதி்யை விவரிப்பது பின் எழுநிலை ஆகும். காதல் கொள்ளும் மகளிரை ஏழுவகையாகப் பாட்டியல் நூல்கள் பிரித்து உள்ளன. |
1) பேதை | - வயது ஐந்து முதல் ஏழு வரை |
2) பெதும்பை | - வயது எட்டு முதல் பதினொன்று வரை |
3) மங்கை | - வயது பன்னிரண்டு முதல் பதின்மூன்று வரை |
4) மடந்தை | - வயது பதினான்கு முதல் பத்தொன்பது வரை |
5) அரிவை | - வயது இருபது முதல் இருபத்தைந்து வரை |
6) தெரிவை | - வயது இருபத்தாறு முதல்
முப்பத்தொன்று வரை |
7) பேரிளம் பெண் |
- வயது முப்பத்திரண்டு முதல் நாற்பது வரை |
பாட்டுடைத் தலைவனைக் கண்டு விரும்புவதாகப் பாடும் 4.1.2
உலாவின் தோற்றமும் வளர்ச்சியும் தொல்காப்பியத்தில் உலா
இலக்கியத்திற்கான தோற்றுவாய் |
மங்கல அணி எழுந்தது தலைக்கோல் வலம் வந்தது |
சில உலா நூல்கள் வருமாறு: திருக்கயிலாய ஞான உலா சேரமான் பெருமாள் நாயனார் சிவபெருமான் மீது பாடியது இந்த உலா. இதுவே முழுமை பெற்ற முதல் உலா நூல் என்பர். திருமாலும் பிரம்மனும் காணமுடியாத பரம்பொருள் ஆகிய சிவபெருமானின் காட்சியைத் தேவர்கள் காண விரும்பினர். இறைவனும் சிறந்த அணிகளை அணிந்த சுந்தரத் (அழகான) தோற்றத்துடன் திருவீதியில் உலாச் சென்றார். இந்நிகழ்ச்சியை விவரிப்பதே இந்த உலா. ஆளுடைப் பிள்ளையார் திருவுலாமாலை நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருஞானசம்பந்தர் பாட்டுடைத்தலைவர். இவ்வுலாவில் ஏழு பருவ மகளிரின் செயல்கள் தனித்தனியே கூறப் பெறாமல், ஒன்றாகக் கூறப் பெற்றுள்ளன. திருவாரூர் உலா அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றியது. திருவாரூர் இறைவனைப் பற்றியது. திருக்கீழ்வேளூர் உலா இந்த நூலையும் அந்தகக்கவ வீரராக முதலியாரே இயற்றி உள்ளார். இவ்வுலா வேளூர் இறைவன் கேடிலியப்பர் மீது பாடப்பட்டது. தமிழன் உலா இநநூலை இராசை. கி. அரங்கசாமி இயற்றி உள்ளார். தமிழர் வரலாற்று நாயகர்களின் பரம்பரையில் வந்த தமிழன் ஒருவன் உலா வருவதை இந்த உலா விவரிக்கிறது. தமிழரின் வரலாறு, பண்பாடு, மொழி முதலியவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடாக இத்தலைவனை ஆசிரியர் படைத்து உள்ளார். |
|