ஒட்டக்
கூத்தர் இயற்றிய உலாக்கள் மூன்று. இம்மூன்றும் பாட்டன், தந்தை, மகன் ஆகிய
மூவரையும்
4.2.1 இராசராச சோழன் உலா இராசராச சோழன் உலா சிறந்த
கவிநயம் வாய்ந்த 4.2.2 நூலாசிரியர் இந்நூலை இயற்றியவர் கவிச் சக்கரவர்த்தி
ஒட்டக்கூத்தர்
ஒட்டக்கூத்தர் இராசராசசோழன் உலாவைப்
பாடி
ஒட்டக் கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப் 4.2.3 பாட்டுடைத் தலைவன் இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய மகனே
இவன் காலத்தில் கும்பகோணத்திற்கு அடுத்துள்ள 4.2.4 இலக்கியச் சிறப்புகள் இராசராசசோழன் உலாவும் அமைப்பு வகையில் இரு
நண்பர்களே! இவற்றைப் பற்றி விரிவாக நாம்
பார்ப்போம். பாட்டுடைத் தலைவனின் முன்னோர்கள் இந்த உலாவில்
இராசராசசோழனுடைய முன்னோர்களின் |
ஒரு புறாவின் துன்பத்தைப் போக்குவதற்காகத் தன்
வானோர் பகைவனாகிய சம்பரன் என்ற அசுரனை
மேல் கடலும் கீழ்க்கடலும் காவிரியால் ஒன்றாகி
ஆதிசேடனுடைய மகளாகிய நாகர் கன்னியை மணம்
தெய்வத்தன்மை வாய்ந்தது மேருமலை. இம்மலையில்
பொய்கையார் எனும் புலவர் களவழி நாற்பது எனும்
போர்க்களம் சென்று போர்புரிந்து கொண்டே
இருந்ததால்
மதயானைகளால் பதினெட்டுப் பாலை நிலங்களையும்
கங்கை, நருமதை, கௌதமி, காவிரி முதலிய
கொப்பம் எனும் ஊரில் பெரும்போர் நிகழ்ந்தது.
நாட்டில் உண்டாகிய கலகத்தை நீக்கியவன்; சுங்க (இராச.உலா. கண்ணி. 1-67)
இவ்வாறாக இராசராசசோழனின் முன்னோர்களின் பாட்டுடைத் தலைவன் சிறப்புகள் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் அடுத்துக் கூறப்பட்டுள்ளன. மங்கலமான இராசராசன் என்ற பெயரை உடையவன். சூரிய குலத்தில் தோன்றியவன். திருமால் பத்து அவதாரங்களைச் செய்தார். என்றாலும் தேவர் பகை முழுவதையும் தொலைக்க முடியவில்லை. எனவே எஞ்சிய தேவர் பகையைத் தொலைக்கச் சூரிய குலத்தில் இராசராசனாகப் பிறந்துள்ளான் என்பர். மனிதகுலத்தில் பிறந்து மேருமலை போன்ற உயர்ந்த |
மக்களின் மகிழ்வான பேச்சு பாட்டுடைத் தலைவன் வீதியில் உலாப் போகிறான். நங்கையீரே!
இந்திரனது வச்சிரப்படையை (ஒரு |
(மகோததி = கடல், சிலை = வில், வாளி = அம்பு, தூங்கும்பதி = தூங்குகம் எயில்(மதில்), சோணாடு = சோழநாடு) என்று புலவர் பாடுகின்றார். சேரர்களின் வஞ்சி நகரத்தை வென்று திறையாகப் பெற்ற முரசத்தைப் பாருங்கள். போரில் தோற்ற மன்னர்கள் பின்னர்த் தம் நாட்டைப் பெற்றுக் கொண்டனர். இதற்காக அம்மன்னர்கள் தலையில் மண் சுமந்து காவிரி அணையைக் கட்டினர். அவ்வாறு கட்டச் செய்த போர் முரசத்தைப் பாருங்கள். இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் கொன்று அவர் சூடிய முடிகளைக் கொண்ட மகுடத்தைக் காணுங்கள் என்று மக்கள் பேசுகின்றனர். இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும்: |
...............................................................உதியர் இடப்புண்ட பேர்இஞ்சி வஞ்சியில் இட்ட கடப்ப முதுமுரசம் காணீர் - கொடுப்பத் தரை கொண்ட வேற்று அரசர் தம்சென்னிப் பொன்னிக் கரை கண்ட போர்முரசம் காணீர். (இராச.உலா. 173-177) |
(இஞ்சி = மதில், வஞ்சி = சேரர் நகர், முது = பழைய / தொன்மையான, சென்னி = தலை, பொன்னி = காவிரி) இவ்வாறாக மக்கள் பாட்டுடைத் தலைவனைப் பலவாறு புகழ்ந்து பேசுவதாகப் புலவர் பாடி உள்ளார். இப்புகழ் மொழிகள் பாட்டுடைத் தலைவனின் முன்னோர் செயல்களாக இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பேதைப் பருவம் உடைய பெண்மகள் ஒருத்தி, மன்னனைக் கண்டு பணியும் நிகழ்ச்சியைப் புலவர் நயம்பட விவரித்து உள்ளார். இப்பகுதியில் முதலில் பேதைப் பருவமகளின் இளம் பருவம் கூறப்பட்டுள்ளது. பேதைப் பெண் எப்படிப்பட்டவள்? அண்மையில் பிறந்த கிளிக்குஞ்சு போன்றவள். தாய்ப்பாலை அண்மையில் மறந்த இளமான் போன்றவள். தோகை வளராத மயில் போன்றவள். சுற்றத்தார்க்கு மகிழ்ச்சி உண்டாக்கும் கரும்பு போன்றவள். முல்லை மாலை போன்ற பற்களை உடையவள். இது எம்முடைய பாவை; இது எம்முடைய கொல்லிப்பாவை என்று கூறிப் பாவைப் பாட்டுப் பாடும் விதம் அறிந்தவள் என இப்பருவமகளின் இளம் பருவம் வருணிக்கப்படுகிறது. இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும். |