4.3 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரையும் உலா இலக்கியம் பற்றி
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள்? உலா
என்றால் என்ன என்பது பற்றியும் உலாவின் இலக்கண
வரையறை பற்றியும் அறிந்து இருப்பீர்கள். உலாவின்
அமைப்பு முறையை அறிந்து இருப்பீர்கள். உலா
இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி மாற்றம் பற்றித் தெரிந்து
கொண்டீர்கள். இருபதாம் நூற்றாண்டு உலா பற்றிய
செய்திகளை அறிந்தீர்கள் இருப்பீர்கள். சிறப்பு நிலையில்
இராசராச சோழன் உலாவின் ஆசிரியர் - பாட்டுடைத்
தலைவன்- இலக்கியச் சிறப்புகள் முதலியவை பற்றி விரிவாகத்
தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. மூவர் உலா என்று எவற்றைக் குறிக்கிறோம்?

விடை

2. இராசராச சோழன் உலாவின் ஆசிரியர் யார்?

விடை

3. ஒட்டக்கூத்தர் எந்தெந்த மன்னர் காலத்தில்
அவைக்களப் புலவராக இருந்தார்?

விடை

4. இராசராச சோழன் உலா கூறும் முன்னோர் சிறப்புகள்
நான்கினைத் தருக.

விடை

5. உலாவில் மங்கைப் பருவ மகளிரின் காதல் நோயைப்
புலவர் எவ்வாறு வருணித்து இருக்கிறார்?

விடை