சதகம் என்ற சொல்லின் விளக்கம் பற்றி கூறுகிறது. சதகம்
என்றால் நூறு என்று
பொருள்படும். சதக இலக்கியத்தின்
இலக்கணம், வகைகள், அவற்றின் நோக்கம் ஆகியவை
பற்றிக் குறிப்படுகிறது. படிக்காசுப் புலவர் பாடிய
தண்டலையார் சதகம் பற்றி விரிவாகப் பே²கிறது. சதகத்தின்
பாடுபொருள்களைக் கருத்து அடிப்படையில் சுட்டிக்
காட்டுகிறது. கற்பின் மேன்மை, புதல்வர் பெருமை,
விருந்தோம்பல் ஆகிய இல்லற நெறிகளைக் காட்டுகிறது.
இனிமை, பொறுமை ஆகிய உயர்ந்த பண்புகளும், பொய்மை,
வஞ்சனையாகிய
சிறுமைப் பண்புகளும் விளக்கப்படுகின்றன.
உலக நீதியையும் அரச நீதியையும் உணர்த்துகிறது.
|
|