பண்பாட்டை மூன்று
வகையாகச் சமூக இயல் அறிஞர்கள்
1.3.1 அடிப்படைத் தேவைகளும் பண்பாடும் மனிதனின் அடிப்படையான தேவைகள் உணவு, உடை, உறைவிடம் தமிழர் உறைவிடம்
சமையல் செய்வதிலிருந்து தொடங்கும். ஏனைய நேரங்களில்
அவை தமிழர்களின்
பண்பாட்டுக் கூறான, கலைத் தன்மையினை வெளிப்படுத்துவன. மேலும் வெளிமுற்றத்தில், தாய் தன் குழந்தைக்கு
நிலாவினைக் காட்டி சோறு ஊட்டுவாள். சிறுவர்கள் நிலா
விளையாட்டு விளையாடுவார்கள்.ஆடவர் அக்கம்
பக்கத்தில் உள்ளோரிடம் உரையாடுவர். அறுவடை செய்த
தானியங்களையும் சேமித்து வைப்பர்.
ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணம் செய்யும்போது இரவு நேரங்களில் பயணத்தை மேற்கொள்ள இயலாது. அத்தகைய சூழலில் போகும் வழியில் உள்ள பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வீட்டுத் திண்ணையில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு, மீண்டும் மறுநாள் காலையில் தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள். வழிப்போக்கர் யார் வந்தாலும் தங்கிச் செல்லும் வகையில், வீடுதோறும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும். தங்கள் வீட்டுத் திண்ணையில் தங்கிச் செல்லும் வேற்று ஊர்க்காரர்களுக்குத் தேவைப்பட்ட உணவையும், பிற உதவிகளையும் செய்து மகிழ்வர். விருந்தோம்பலின் அடையாளமாக வீட்டுத் திண்ணைகளை அமைத்திருப்பது தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. 1.3.2 பண்பாட்டுக்கல்வி எந்த ஒரு மனிதனும் பண்பாட்டுக் கூறுகளுடன் பிறப்பதில்லை. எனவே, வம்சா வழியாக (biological inheritance) அவனிடம் பண்பாடு வந்து சேராது. அவனாகவே, பிறரிடமிருந்து தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தை தனது அனுபவத்தினாலும், பிறரைப் போலச் செய்தலினாலும் (imitation) பண்பாட்டைத் தெரிந்து கொள்ளுகிறது. தன்னைச் சுற்றி இருக்கும் மக்கள் என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள், எதை எதை எல்லாம் சரி என்று சொல்கிறார்கள், எதையெல்லாம் தவறு என்று கூறுகிறார்கள் என்பவற்றைக் கவனித்தும் (watching), கூர்ந்து நோக்கியும் (observation), தான் சார்ந்த சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்து கொள்ளுகிறது.சில பண்பாட்டுக் கூறுகளைப் பெற்றோரோ, பிறரோ சொல்லிக் கொடுப்பதில் இருந்து குழந்தைகள் தெரிந்து கொள்ளுகின்றனர். எடுத்துக்காட்டாகத் தமிழ்க் குழந்தைகளிடம் பெரியவர்களைப் பார்த்தால் எழுந்திருக்க வேண்டும், வணக்கம் சொல்ல வேண்டும், பணிவாகப் பேச வேண்டும், என்று பெற்றோர் சொல்லிக் கொடுக்கின்றனர். குழந்தைகள் அவற்றைப் பின்பற்றுகின்றன. ஆயினும், குழந்தைகளிடம் சில பண்பாட்டுக் கூறுகள் அவர்கள் அறியாமலே, அவர்களிடம் படிந்துவிடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, அரேபியர்கள், ஒருவரோடு ஒருவர்பேசும் பொழுது மிகவும் நெருங்கி நின்று பேசுவார்கள். அரேபியக் குழந்தைகளும், அவர்களை அறியாமலே எல்லோரிடமும் நெருங்கி நின்று பேசுகிறார்கள். இதையாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்தப் பண்பாட்டுக் கூறு குழந்தைகளிடம் தானாகவே அமைந்து விடுகிறது. 1.3.3 பண்பாடும் குறியீடும் ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம் குறியீடு (Symbol)எனப்படும். சிவப்புக் கொடி அபாய அடையாளத்தின் குறியீடு. ஒவ்வொரு பண்பாட்டைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தும் குறியீடுகளும் அவரவர்களின் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன. பல்வேறு சமுதாயங்களும் வண்ணங்களை (colours) வெவ்வேறு பொருள் உணர்த்தும் குறியீடுகளாகப் பயன்படுத்துகின்றன. ஒரே வண்ணம், ஒவ்வொரு பண்பாட்டைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்ப, ஒவ்வொரு விதமான பொருளைக் கொடுக்கும். எடுத்துக்காட்டாக, வெண்மை நிறம், ஐரோப்பியர்களுக்குத் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. திருமணங்களில் வெள்ளை ஆடைகளையே அவர்கள் அணிகின்றனர். வெண்மை அங்கு மங்கலமாகக் கருதப்படுகிறது; கருப்பு துக்கத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், சீனர்களுக்கோ வெள்ளை நிறம் துக்கத்தின் அடையாளம்!
|
|||||||||||||