தன் மதிப்பீடு : விடைகள் - II

5. மார்க்கோபோலோ தமிழ்மக்களின் பழக்கங்களில் எவற்றை
முக்கியமானவையாகக் குறிக்கிறார்?

• பாண்டி நாட்டு மக்கள் நாள்தோறும் இருமுறை குளித்தனர்.
குளிக்காதவர்களைத் தூய்மைக் குறைவாகக் கருதினர்.

• தண்ணீரை உதட்டுக்கு மேலே தூக்கிப் பருகினர்.

• வலது கையால் சாப்பிட்டனர்.

• மன்னராயினும் தரையில் உட்கார்ந்து பேசுவதைக் குறைவாகக்
கருதவில்லை.     மார்க்கோபோலோ     மேற்கண்டவற்றைத்
தமிழ்மக்களின் முக்கியமான பண்பாடுகளாகக் குறிக்கின்றார்.