இல்வாழ்க்கைக்கு
வள்ளுவர் கொடுத்த சிறப்பிடம்,
இல்வாழ்க்கைக்குத் துணையாக அமையும் இல்லாளின்
சிறப்புகள், மக்கள் செல்வத்தின் பெருமை, தமிழர்களின்
விருந்து ஓம்பும் பண்பு, ஆகியவை பற்றிய கருத்துகள்
இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•
இல்வாழ்க்கை
என்றால் என்ன என்பது பற்றிய வள்ளுவர்
கருத்துகளை எடுத்துரைக்க இயலும்.
•
இல்வாழ்க்கையின்
சிறப்பினை வள்ளுவர் நோக்கில்
மதிப்பிட முடியும்.
•
சமயவாதிகளிலிருந்து
வள்ளுவர் வேறுபட்டவர் விளக்க
இயலும்.
•
தமிழர்களின்
விருந்து ஓம்பும் பண்பைக் குறள் வழியாக
விவரிக்க முடியும்.