| பொதுவாகத்
துறவு என்பதனைச்
சமயத்தோடும்
சமயவாதிகளோடும் தொடர்புபடுத்தி, இல்வாழ்க்கைக்கு
எதிரான ஒன்றாக - இல்வாழ்க்கையை
விட்டுவிட்டு,
காட்டுக்குச் சென்று தவம் செய்யும் ஒரு செயலாக - கூறும்
மரபு உள்ளது. இதற்கு முற்றிலும் மாறுபட்ட
நிலையில்
அறத்துப்பாலில் இல்வாழ்க்கையைப் பற்றிக்
கூறும்
இல்லறவியலுக்கு அடுத்ததாகத் துறவறவியல் என்ற
தலைப்பில் ‘துறவு’ பற்றி வள்ளுவர் கூறுகின்றார். வள்ளுவர்
கூறும் அத்துறவு நிலை பற்றிய செய்திகளே இப்பாடமாக
அமைகின்றன.
|