|
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
E
|
| அரசு
ஆள்பவர்க்குத் துணை புரியும் உறுப்பு
நலன்களாக
வள்ளுவர் கூறும் செய்திகளை
இப்பாடம் தொகுத்து
வழங்குகிறது. படைச்சிறப்பு, குடிச் சிறப்பு
, செல்வச் சிறப்பு;
மற்றும் அமைச்சு, நட்பு, அரண், ஆகியவற்றைத்
தேர்ந்து
அமைத்துக் கொள்வதற்கான வழிவகை ஆகியவற்றை வள்ளுவர்
வழியில் நின்று இப்பாடம் விளக்க முயல்கிறது.
|
|
| இப்பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
-
அரசாண்மைக்கு வலுவினைச் சேர்க்கும் உறுப்புகளைப்
பட்டியிலிடலாம்.
-
படை,
குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் - இவற்றிற்கு
வள்ளுவர் வகுத்திருக்கும் இலக்கணத்தை விவரிக்கலாம்.
-
வள்ளுவர்
வகுக்கும் இலக்கணத்தின் வாயிலாகப்
பண்டைத் தமிழரின் பண்பாட்டு, நாகரிக வளர்ச்சியை
விளக்கலாம்.
|
|
|