C03142 : அரசர்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
E
  • அரசனின் இயல்புகளாக, அஞ்சாமை, ஈகை, அறிவு,
    ஊக்கம் ஆகியவை சுட்டப்படுகின்றன.

  • இயற்றல், ஈட்டல், பாதுகாத்தல், வகுத்தல், ஆகியவை
    மன்னனின் கடமைகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

  • கொடை, இரக்கம் செங்கோன்மை, குடி ஓம்பல்
    போன்றவை மன்னனின் செயல்திறன்களாகத் திகழ்வது
    விளக்கப்படுகிறது.

  • மக்களோடு மன்னன் பழகும்போது காட்சிக்கு எவ்வாறு
    எளியவனாக இருக்க வேண்டும், இனிமையாகப் பேச
    வேண்டும்     என்பதைப்     பற்றிய கருத்துகள்
    கூறப்பட்டுள்ளன.


இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள் எவை
    எவை என்பனவற்றை அறிந்து கொள்வீர்கள்.

  • அரசனின்     கடமைகளாக வள்ளுவர்
    வலியுறுத்துவனவற்றையும் தெரிந்து கொள்வீர்கள்.

  • அரசர்களுள் சிறப்புடையவனாக ஒரு மன்னன் இருக்க
    வேண்டுமானால் எத்தகைய செயல்திறன்கள் தேவை
    என்பதை அறிந்து கொள்வீர்கள்.

  • முடியாட்சிக் காலத்தில் மன்னனுக்கு உரியனவாகச்
    சொல்லப்பட்ட கருத்துகள் இன்றைய குடியாட்சிக்கும்
    எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்து
    கொள்வீர்கள்.